நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
04.07.2024
27. ‘மனுஷர் புகழ்ச்சி’ தேடுவது, பெரு நஷ்டம்!
நீங்கள் மனுஷர் புகழ்ச்சியைத் தேடுகிறவர்களாயும், அதைப் பெறுபவர்களாயும் இருந்தால் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்கள் என்னைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் அல்லது பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிவதற்கு ஆர்வம் கொண்டவர்களாய் இருந்தால்...... இதுவே, நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் தேவபக்தியாய் வாழ்வதற்குரிய ‘பரிசுத்தாவியின் இணைப்பை’ துண்டித்துவிடுகிறது!
இவ்வுலக மானிடரிடத்தில், சர்வ சாதாரணமாய் புழங்கும் இப்பாவத்திலிருந்து நீங்கள் எப்படியாவது பூரண விடுதலைபெற நாடுவதே, ஞானமுள்ள நடவடிக்கையாகும்! இது சற்றுகடின மேயாகும், பெலனற்ற நமக்கு ‘வல்லமையைத்’ தரும் பரிசுத்த ஆவியானவரை நாடி ஆவியில் நிறைந்திடுவோமாக! ஏனெனில், நாம் சதா மற்ற ஜனங்களோடு புழங்கவேண்டியிருப்பதால், நாம் தொடர்ச்சியாக மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள்? என எண்ணும்படி சோதிக்கப்பட்டு வீழ்ச்சிகளடைந்துள்ளோம்! இருப்பினும், இதிலிருந்து விடுதலை யாவது சாத்தியமே! மற்றவர்கள் உங்களை எவ்வாறு நிதானிக்கிறார்கள் அல்லது குறைபேசு கிறார்கள் என்பதில் சிறிதும் அக்கறை கொள்ளாமலிருக்கும் இம்மிகப்பெரிய இரட்சிப்பை நீங்கள் ருசித்துவிட்டால், அதுபோதுமே!
- ரத்னம்