நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
இவ்வளவு பெரிய கல்லை ‘எனக்காக’ யார் புரட்டித் தள்ளிட முடியும்? என மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாய் மரியாளும், சலோமேயும் திகைத்து நின்றது போல்தான் இந்த மானிட வாழ்க்கை உள்ளது! கேள்விக்கு கிடைத்த அதிசய விடை எது தெரியுமா? “எழுந்தார் இறைவன்!” என்ற சுவிசேஷ - நற்செய்தியே ஆகும்! “சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசு... உயிர்த்தெழுந்தார்!” (மாற்கு.16:1-7).
பாவ சோதனையோ, கொல்கொதா போன்ற சூழ்நிலை அவச்சொல்லோ, தீதுமொழிகளோ, கசந்த காடியின் அனுபவங்களோ.... எதுவாயிருந்தால் என்ன? ‘தன் சிலுவை’ சுமந்து ‘தன் சுயம்’ சிலுவையிலறையுண்டு வாழ்ந்திடவே கவனம் கொண்டால்.... அவரோடு சிலுவையிலறையப்பட்ட யாதொருவனும், அவரோடு எழுந்திருப்பான்! (கலா.2:20). அவரோடு எவ்வித கொடிய சூழ்நிலையையும் ‘ஜெயித்தெழுந்து’ ஆளுகை செய்வான்!! இந்த அதிசய விடை தரும் “சிலுவையின் உபதேசம்” கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாய் தோன்றலாம்..... இரட்சிக்கப்படுகிற நமக்கோ, வாழ்வின் ‘பெருங்கல்லையும்’ புரட்டித் தள்ளும் தேவ பெலனாய் இருக்கிறது! (1கொரி.1:18). ஆமென்!