பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
18.05.202 

08. தேவனுக்கு மாத்திரமே மகிமை செலுத்துங்கள்!

 “சுய மகிமையில் சீழ் பிடிக்கும்!” என்பது பொதுவாக கூறப்படும் உண்மையான வாசகமேயாகும். இதை வேதம் கூறும்போது “அழிவு வரும் முன், மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்” என்றே கூறுகிறது (நீதி.18:12).  பிலிப்பியர்.3:3-ம் வசனம் “மாம்சத்தின் மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்!” எனக்கூறும் இந்த வசனத்தையும் மனதில் கொள்ளுங்கள். இன்னும் அதிகமாய் “மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே (அவரை மாத்திரமே) மேன்மை பாராட்ட வேண்டும்” என 1கொரி.1:30-ம் வசனம் எடுத்து கூறுவதையும் பாருங்கள்! ஆகவே, ஒருவன் தன்னைக் குறித்து மகிமைப்படுத்தாமலும், அல்லது மேன்மை பாராட்டாமலிருப்பதும் தாழ்மையின் ரூபமாகும்! ஒருவன் “கர்த்தரைக் குறித்து மேன்மைபாராட்ட முடியாதிருந்தால்” அதற்குப் பெயர் தாழ்மை அல்ல! அவன், விசுவாச தைரியம் இல்லாதவன்! தெய்வ விசுவாசத்திற்கும் தெய்வ அன்பிற்கும் வெற்றிக் கொடி உயர்த்தாதவன்! நீங்களோ அல்லது உங்கள் சபையோ, கிறிஸ்துவின் மணவாட்டியாய் திகழ வேண்டுமென்றால், உங்கள் அல்லது உங்கள் சபையின் விசுவாசத்திற்கும் அன்பிற்குமே எப்போதும் வெற்றிக் கொடி ஏற்றுங்கள்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!