பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
05.03.2020

3. ‘சீஷத்துவம் காக்கும்’ உத்தம சபை வேண்டும்!

image

தங்கள் ‘தேவைக்கேற்ப’ கையில் அள்ளி குடிக்காமல், உலக தாகத்திற்கு “முழங்கால் ஊன்றி” குடித்த திரளான ஜனங்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டான், கிதியோன்! (நியா.7:5). தனக்குண்டான யாவற்றையும் வெறுத்துவிடாமல் ‘சீஷத்துவம்’ இல்லை... என்ன, நீங்களும் போய்விட மனதானீர்களோ, என பன்னிருவரையும் உலுப்பிவிட்டார் இயேசு! (யோ.6:66,67). சரித்திர சக்கரம் ஓடி முடியப்போகும் இந்நாட்களில், எருசலேம் தூய சபையில் “மீதியானவர்கள்” இருப்பார்கள் என மகிழ்கிறது வெளிப்படுத்தின விசேஷம்!

கேளுங்கள் சபை மாந்தரே கேளுங்கள்: வெற்றிக்கு அடிப்படையை “எண்ணிக்கை அதிகம் கொண்ட சபைக்கு” ஒப்பிடவே கூடாது! ஏனெனில், கட்டிடம் ஜனங்களால் நிரம்பியிருப்பதைவிட, அங்கும் இங்கும் “காலியாய் இருக்கும்” இடங்களில் அதிக ஆசீர்வாதம் அமர்ந்திருக்க முடியும்! ஏன் தெரியுமா? உணர்வுள்ள ஓர் சபையில், வருடா வருடம் எண்ணிக்கை குறைந்தால் “அதுவே” அங்குள்ள ஊழியன் மகா உத்தமம் நிறைந்தவன் என்பதற்கு ஆதாரம்! ஆம், அந்த ஊழியன் யாதொரு “பிரபல்ய உபதேசங்களுக்கும்” பலியாக வில்லை! அல்லது, “தீமைகளை விட்டுவைத்தும்” திரள் கூட்டத்தை சேர்த்திடவில்லை!

எங்கே உள்ளது அந்த உத்தம சபை? அதை, இயேசுவின் சீஷத்துவ வீரர்களே தேடிப் பிடித்து அமர்வர்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!