பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


19.11.2026                                                 47வது வாரம்

பரிசுத்தாவி அருளும் ‘மகிழ்ச்சி’ இழப்பது துயரம்!


 சோதனை வேளையில் “நாம் பாவத்தில் வீழ்வது” நம் மகிழ்ச்சியை இழக்கும் சோகமேயாகும்! ‘வேசித்தன பாவம்’ சிம்சோனின் தலைமுடியை சிரைத்து, மகிழ்ச்சியை பறித்தது!  இன்றும் புதிய உடன்படிக்கை ஜீவியத்தில், ‘வேசித்தனத்தின் மடியில்’ பரிசுத்தாவியின் பெலனையும், மகிழ்ச்சியையும் இழந்த சிம்சோன்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்! சிம்சோனை ஒப்பிட்டுக் கூற வேண்டுமென்றால் “இவர்களின் தலைமுடி சிரைக்கப்பட்டது!” என்றே கூற வேண்டும்! அதுபோலவே, யாரோ நமக்குச் செய்துவிட்ட சில தீமைகள், பரிகாசங்கள் அல்லது ஏற்பட்ட அவமானங்கள், நம் தலைமுடி சிரைக்கப்பட ஒப்புக்கொடுப்பது சரியா? யார்யாரோ அல்லது எந்தந்த சூழ்நிலைகளோ “என் பெலனாகிய மகிழ்ச்சியை” சிரைத்துவிட அனுமதிக்கலாமோ?

 இயேசு அடைந்த பரிகாசமும், நிந்தையும், பாவிகளால் உண்டான விபரீதங்களும், அவமானங்களும்....  அவர் தனக்கு முன்பாக வைத்து பாதுகாத்த “சந்தோஷத்தைப்” பிடுங்க முடியவில்லை! அந்த சந்தோஷத்தின் மிகுதியில் ‘வானங்கள் வழியாக ஏறி’ தன் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்தார்!! (எபி.12:2,3). அவர் சென்ற இந்த ‘சிலுவைப் பயணமே’ வெற்றிப் பயணம்! பிதாவின் சமூகத்திலுள்ள நித்திய பேரின்பத்தை ‘எவ்வித சிலுவை’ நேரத்திலும் இழந்துபோகாத தேவராஜ்ஜிய புத்திரர்களின் பயணம்!!  ஆமென்.

- ரத்னம் 


வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!