நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
04. நம் விசுவாசம் ஒழியாதிருந்த இரகசியம்! |
வானமண்டல பொல்லாத தீயஆவியின் போராட்டம் ‘கோரப்பற்களோடு’... வெளவால் போன்ற ‘கிறீச்’ சத்தத்தோடு, பேதுருவை தாக்கவில்லை! அதுபோன்ற, இழிவான பிரமைக்குரிய அச்சம் ‘சீமோன்களுக்கு’ இருப்பதில்லை! அந்த தாக்குதல் “ஒரு வேலைக்கார பெண்... ஒரு சாதாரண மனிதன்” ஆகிய இவர்கள் ‘நீ அவருடைய ஆள்தானே!’ எனக்கூறிய தற்செயலான சம்பாஷணையில் நடந்தது!
இயேசு கண்டதுபோல், இந்த சாதாரண வேலைக்கார பெண்ணிற்கு பின்பாகவே, தன்னைப் புடைக்க வந்த ‘சாத்தானை’ பேதுரு காண அறியாதிருந்தான்! ஆகிலும், இயேசு ‘சீமோனுக்கு’ ஜெபித்தாரல்லோ... ஆகவே, ‘அவன் மறுதலித்தான்’ என்பது பெரிய காரியமே அல்ல ... அவனது ‘கோதுமைமணியான விசுவாசம்’ புடைக்கப்பட்டு பதருக்குள் போகவில்லை! என்பதே பெரிய காரியம்!! ஆம் பேதுரு ஜெயித்தான்! எல்லாம் ‘சீமோனுக்காக பரிந்துரை செய்த’ இயேசுவின் ஜெபமே, அந்த இரகசியம்!