பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
08.02.2024

06. சபை செல்லும் நோக்கம் இழந்த கிறிஸ்தவர்கள்!

 இன்றைய கிறிஸ்தவ ஜனங்கள் ‘திரள்கூட்டத்தை’ பரவசமாய் எண்ணுகிறார்கள். ஆகவேதான், திரள்கூட்டத்தைப் பார்த்து, தன்னைப் பின்பற்றி வரும்படியான இடுக்கமான வாசலை காண்பித்தவுடன், அநேகர் பின்தங்கி சென்றுவிட்டார்கள்!

இதுபோன்றவர்கள், தாங்கள் ஏன் சபை ஆராதனைக்கு செல்லுகிறோம் என்றுகூட அறியாதிருக்கி றார்கள். தாங்கள் சபை ஆராதனைக்குச் செல்லவில்லையென்றால் ‘அது தவறு’ என்ற எண்ணத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு நிலைக் கதவின் ‘கீலின் மேல்’ நின்று ஆடிக்கொண்டிருக்கும் கதவைப்போலவே, எந்த நோக்கமும் இல்லாமல் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆராதனை, ஆத்துமத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை. இதுபோன்றவர்களே “பிரசங்கம் சுருக்கமாய் இருந்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள்” இல்லையென்றால், அது அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. 

சீக்கிரத்தில் கூட்டம் முடிந்து, ஆராதனைக்கு கூடி வந்த ஜனங்களோடு வீட்டு விஷயம், வியாபார விஷயம், அரசியல் விஷயம், சபையை புறங்கூறுதல்..... போன்றவைகளை அளவளாவி பேசி செல்லுவதற்கு இவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசுவிடம் நெருங்கிச் செல்லும் பாக்கியத்தை, சபைக் கூட்டத்தில் இவர்கள் பெற்றதேயில்லை!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!