பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
07.03.2019

4. ‘வர்த்திக்கப்படும் விசுவாசத்தின்’ இரகசியம்!

image

இரட்சிக்கப்பட்டோம்! ஆகிலும் “இயேசுவைப்போல் ஜெயித்து வாழ” எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும், என சீஷர்கள் இயேசுவை வேண்டி நின்றார்கள் (லூக்கா.17:5). அவர் பரிசுத்தராய் இருக்கிறதுபோல! பிதா இரக்கமாயிருக்கிறதுபோல! இயேசு அன்பாய் இருக்கிறது போல! அவர் நடந்ததுபோல! பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறதுபோல! பிதா பூரண சற்குணராய் இருப்பது போல.... என அவர் ஜெயங்கொண்டதுபோல, அதே வாழ்வு சுதந்தரிக்க, நிச்சயமாய் நம் விசுவாசம் வர்த்திக்கப் பண்ணப்பட வேண்டும்!

இதற்கு இயேசு தந்த நற்செய்தி என்னவென்றால் “கடுகளவு விசுவாசம்” நமக்கிருந்தால் போதும் என தம் சீஷர்களுக்கு அழைப்பு கொடுத்து... அதை ‘கடின சோதனைகளில்’ அப்பியாசப்படுத்த துவங்குங்கள்! அப்போது ‘மலை’ நம் முன் நின்று மறிப்பதுபோல் “அவிசுவாசம்” முன் நிற்கும்! இந்த வாழ்க்கை முடியவே முடியாது! என “காட்டத்தி மரம்” தலை விரித்து ஆடும்! இதைக்கண்டு, எண்ணற்றோர் “இந்த ஜெய வாழ்வு சாத்தியமில்லை!” என திரும்பிச் சென்று வீழ்ச்சியுற்றனர். ஆனால் சீஷர்கள் என்ன செய்ய வேண்டுமென்றே இயேசு கற்றுக் கொடுத்தார்! அவிசுவாச மலையைப் பார்த்து “பெயர்ந்துண்டுபோய், என் கண்ணில் இனியும் தென்படாதபடி, கடலின் நடுவில் வீழ்ந்து மூழ்குவாயாக” என பேச, அவ்வாறே நடக்கும்! என, விசுவாசம் வர்த்திக்கப்பட்டு ஜெயங்கொண்டு வாழ, அந்தந்த சோதனை நேரங்களில் அவிசுவாசத்தை கடிந்து கொள்வதே விடை என கூறி மகிழ்ந்தார்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!