05.10.2023
17. நல்ல அறுவடை பெற்ற ஓர் விவசாயிபோல!
இப்போது நமக்கு முக்கியமாய் இருப்பதெல்லாம், ஓர் வைராக்கிய ஆவியினால் நிறைந்து “தேவ சித்தம் செய்வதும்” “தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதுமே யாகும்!” தன் சிலுவை எடுத்து சுயத்திற்கு மரிப்பது போன்ற “ஆவிக்கேற்றபடி விதைப்பதற்கு” எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேகமாய் செயல்படுவதேயாகும்! இவ்வாறு நீங்கள் செயல்பட்டுவிட்டால், ஓர் வண்டி நிறைய தன் அறுவடை களஞ்சியத்தோடு வரும் விவசாயிக்கு ஒப்பாய், நீங்கள் கெம்பீரமாய் பரலோக இராஜ்ஜியம் பிரவேசித்து விடுவீர்கள்!
தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையை, நித்திய லாபமாய் கொடுத்தே தீருவார்! இதைக்குறித்து மற்ற ஜனங்கள் என்ன அபிப்பிராயம் கொள்கிறார்கள் என்பதெல்லாம் அவருக்குப் பொருட்டல்ல. அல்லது பிறர் நம்மை எவ்வளவு தீமையாய் பேசுகிறார்கள் ஆகிய யாதொன்றும் தேவனைப் பாதிப்பதே இல்லை. உங்கள் ஆவிக்குரிய ‘விதைப்பையும்’ அதற்கேற்ற பிரயாசத்தையும், கனி நிறைந்த அறுவடையுமே தேவன் எதிர்நோக்குகிறார்!