பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

07.05.2026                                                            19வது வாரம்

‘சாந்தகுணம் இழந்த’ யேசபேல்களை, கர்த்தர் ஏற்றுக்கொள்வதில்லை!

 யேசபேல் ஒரு பெண்மணி! எலியாவின் காலத்தில் ஜீவித்தாள்! (2இராஜா.9:22). இந்த யேசபேலின் விருப்பமெல்லாம், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பிறரை ஆதிக்கம் செய்வதேயாகும். இவ்வாறு தன் ஆதிக்கத்தின் மூலம், கர்த்தருடைய பரிசுத்தவான் களையும், அந்த சபையின் ஊழியனையும்கூட தான் விரும்பியதைச் செய்யும்படி வைத்து விடுவாள் இந்த யேசபேல்! 

 இந்த யேசபேல், பிறர் தன் மீதே கவனம் செலுத்த விரும்புவாள்! மேலும் தன்னையும், தன்னை முக்கியப்படுத்தும் விருப்பங்களையும் ஜனங்கள் மத்தியில் உயர்த்தி அதை முயற்சிப்பாள். தன்னை ஒரு தீர்க்கதரிசி என்பாள்! சொப்பனம் கண்டேன் என்பாள்! வெளிப்பாடு கிடைத்தது என கூறுவாள்! கர்த்தர் எனக்கு பேசினார் என்பாள்! தன் அகந்தையை மறைத்து ஆவிக்குரியவளைப் போல் நடிப்பாள்!

 சாந்தமும் அமைதலுமான ஆவியினால் உடுத்திக் கொண்டு, வேதவாக்கியத்தின்படி அடங்கியிராமல், தன்னை ஓர் தீர்க்கதரிசியைப்போலவும், பெரிய ஆவிக்குரியவளைப் போலவும் உயர்த்த விரும்புகிற எந்த ஸ்திரீயையும், நாம் விழிப்பான கண்களோடுதான் கண்காணிக்க வேண்டும்.

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!