பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


17.10.2024

42.  தொழுகையின் ‘சுரமண்டல’ கீதம், இன்று வெகுவாய் மங்கிவிட்டது!


 தேவனால் ஆட்கொள்ளப்பட்டு, நீங்காத அவரது சிந்தனையால் நிறைந்திருக்கும்படியே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்! ஏனெனில், தேவன் ஆவியாயிருக்கிறார்.... அவரை தொழுது கொள்ளுகிறவன் ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்!

 தேவனை ஆராதிப்பதற்கென்றே மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்! தன்னை ஆராதித்து இசைத்திட, அவர் மனிதனுக்கு மிகப்பெரிய இசைக்கருவி தந்தாரென்றே சொல்ல வேண்டும்! தேவன் கூறினார் “நான் சிருஷ்டித்த எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் மேலாக, உனக்கே இந்த தாவீது ஆராதித்ததுபோன்ற விலையேறப்பெற்ற ‘சுரமண்டலம்’  தந்துள்ளேன்..... நீ மாத்திரமே, சிருஷ்டிப்பு களில் ஒருவரும் இசைத்திட முடியாத மாபெரும் இசையை, இந்த சுரமண்டலத்தால் இசைத்து என்னை தொழுதிட முடியும்!” எனக்கூறினார். ஆனால் மனுஷனோ... ‘தொழுகையின்’ இந்த அற்புத இசைக்கருவியை, மண்ணில் எறிந்துவிட்டான்! கிறிஸ்து இந்த பூமிக்கு ஏன் வந்தார்? பின்மாறிப்போன மானிடர்களை, மீண்டும் “ஆராதிக்கிறவர்களாய்” மாற்றும்படியே வந்தார். சிருஷ்டிக்கப்பட்ட நமக்கு ஏற்ற உகந்ததாய் இருப்பதே, இந்த தெய்வ ஆராதனைதான்! 

 ஆனால் “ஆராதனை.... ஆராதனை எனகூறிக் கொள்ளும் இன்றைய கிறிஸ்தவ சபைகளில் தேடிப்பார்த்தால், மெய்யான ஆராதனை அங்கு இல்லை!” அந்த ஆதி மதுர இசையின், இன்னிசை ஓசை அங்கு காணப்படவில்லை!! தெய்வ ஆராதனையை உடனே விளக்கிச்சொல்ல “அதை ஒருவன் தன் இருதயத்தில் உணர வேண்டும்!” என்பதேயாகும். ஆராதனை வழிமுறையை ஒருவன் செய்துவிட்டு, தன் இருதயத்தில் தேவனை உணராத மனுஷன், “ஆராதிக்கவில்லை” என்றே உறுதியாய் கூறமுடியும்!



- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!