பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

13.08.2026                                                 33வது வாரம்

தேவன் அருளிய சூழ்நிலைகளே, நம்மை தாழ்மைக்குள் நடத்தும்!

 வுலின் மாம்சத்தில், ஓர் முள் கொடுக்கப்பட்டவுடன் முதலில் அது தன்னைவிட்டு நீங்க வேண்டும் என்பதே பவுலின் விருப்பமாயிருந்தது. மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக் கொண்டேன். அதற்கு ஆண்டவர்: “என் கிருபை உனக்குப்போதும்; உன் பலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும்!” என்றார். முடிவில் பவுல் அம்முள்ளிற்காக மேன்மை பாராட்டி அதில் மகிழ்ச்சியும் கண்டார்! 

 கர்த்தர் அமைத்த ‘சூழ்நிலையை’ ஏற்றுக்கொண்டவனே, தாழ்மைக்கு தன்னை ஆயத்தம் செய்திடுவான்! அந்த முதல் நிலைக்கு ஆயத்தம் இல்லாதவன், ‘தாழ்மையின் செயலுக்குள்’ பிரவேசித்திட மாட்டான். அந்த ராப்போஜன வேளையில், சீஷர்களுடைய கால்களை கழுவும் ஆயத்தமாய் “பாத்திரம், தண்ணீர், துடைக்கும் சீலை” இருப்பதை இயேசு கண்டார்! (யோவான் 13:4,5). தன்னை தாழ்த்தி “சீஷருடைய கால்களைக்” கழுவிடத் தொடங்கினார்! இவ்வாறாக, நாம் கிறிஸ்துவைப் போன்ற “அடிமையின் ஸ்தானத்தை” கண்டடைந்து, மரணபரியந்தமும் தாழ்மைப்பட்டிருக்கும் பாக்கியம் பெறுகிறோம்! ஆமென்.

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!