பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


25.07.2024

30.  ஆட்டுக்குட்டியின் ஜீவியமில்லாமல், அதன் தோலை போர்த்துவது தவறு!



                

  த்தேயு 7:15-19, “ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருகிற கள்ளத்தீர்க்க தரிசிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்...” என இயேசு எச்சரித்தார்! போர்த்துக்கொள்ளுதல் என்பது ‘வெளியே’ அணிந்து கொள்ளுதல் ஆகும்! அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தையும், அவருடைய வார்த்தைகளையும், கிருபை, விசுவாசம், இயேசுவின் இரத்தத்தினால் ஒப்புரவாகுதல் போன்ற வார்த்தைகளையும் வெளியே அணிந்துகொள்கிறார்கள்! 

    ஏனெனில், இவைகளே பக்திக்குரிய தோற்றத்தை காண்பிக்கிறது! ஆனால், அவர்களோ, இன்னமும் தங்களின் அந்தரங்க வாழ்வில் பாவத்தைவிட்டு இன்னமும் விலகாதவர்கள்! தேவசித்தத்திற்கு மாறாக தனக்கானவைகளை தேடுகிறவர்கள், அவர்கள் தேவனுடைய கற்பனைகளை மீறி அதை அவமாக்குகிறவர்கள்! கேட்டால், தேவனுடைய கற்பனையை நீங்கள் கைக்கொள்வதை மாத்திரம் பாருங்கள்! என துணிகரமாய் மழுப்புகிறவர்கள்! மேலும், தேவ ஆவியின் பெலத்தை பெறுவதும் போதுமானதல்ல! எனக் கூறி...  இயேசு கிறிஸ்து நமக்காக,  நாம்  கடைப்பிடிக்கவேண்டிய எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டு விட்டபடியால், நாம் கடைப்பிடிப்பது முற்றிலும் அவசியமில்லாதது என்றும் சொல்கிறார்கள்! அவர்கள் கெட்ட கனிகளை கொடுக்கிறார்கள். அதேநேரத்தில்... பாவமன்னிப்பில் தங்களை தாங்களே ஆறுதல்படுத்திக் கொள்கிறார்கள்! பாவத்திலேயே தொடர்ந்து ஜீவிக்கும்படியாக தேவனுடைய கிருபையை தங்களுக்கென சாதகப்படுத்துகிறார்கள்!

 - ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!