நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
ஒன்று இருந்தால், மற்றொன்று இல்லை என்பதே மானிடம்! ஆனால், ‘கிருபையின்’ பெருக்கத்தில் மனதுருக்கம் கொண்ட இயேசுவோ ‘சத்தியத்திலும்’ கெர்ஜிக்கும் யூதா சிங்கமாய், பக்தி வைராக்கியத்தில் பட்சிக்கும் அக்கினியாய் நிறைந்து வாழ்ந்தார்!
தெய்வ கிருபையை போற்றிப் புகழ்ந்துவிட்டு, தொடர்ந்து பாவத்தில் வாழ்வதற்கே ‘தெய்வ கிருபையை’ நாடுவோரை, இயேசு இன்றும் மறுக்கிறார்! “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது, நான் உன்னை ஆக்கினைக்குள்ளாய் தீர்ப்பதில்லை....... ஆகிலும், ஸ்திரீயே, இனி பாவம் செய்யாதே!” என முழங்கும் இயேசு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார்!! (யோவான்.8:11,12).
தெய்வ கிருபையை, தங்களுக்கேற்றபடி காம விகாரத்திற்கு புரட்டும் ‘கொடிய காலம்’ இது! பிலாத்துவின் கோர்ட்டில் “சத்தியவானாய்!” நின்றவரை... பொய்யே நிறைந்த அந்த வழக்கு மன்றத்தில் “சத்தியமா....?” என வியந்து நோக்கினான் நீதிபதி பிலாத்து!! (யோவான்.18:37,38). தன் வீட்டிலும் சபையிலும் “சத்தியத்திற்கு சாட்சியாய்” வாழும் மாந்தரே “சத்திய ஆவியை” பெற்றவர்கள்!! சத்தியத்திற்கு ஊறுவிளைவிக்கும் ‘ஒத்த வேஷம்’ நிறைந்த இந்நாட்களில்..... சத்தியம் பேசும் சத்தியவான்களே இன்றைய நமது தேவை!!