பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
11.06.2020

5. ‘நம்மை ஊடுருவி உணர்த்தும்’ இயேசுவின் கண்கள்!

image

தினசரி தேவனுடைய சமூகத்தை தேடும் நாம், அவர் சுட்டிக்காட்டும் பாவத்தை மழுப்பி அதற்கு மாற்றுபெயர் வைத்து அழைக்காதிருப்போமாக. இதுவரை நமது பாவங்களை மறைத்து வாழ்ந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்திடக்கடவோம்! “அவனுடைய ஆத்திரமே பேய்த்தனமானது.... என்னுடைய கோபமோ நியாயமானது! என் மனைவிதான் தொட்டதற்கெல்லாம் சினுங்குவாள்.... நானோ என் நரம்பு தளர்ச்சியால் எரிச்சல் அடைந்தேன்! அவன் பேராசைக்காரன்.... எனக்கோ என் வியாபாரத்தை விஸ்தாரப் படுத்தினேன்! அவனுக்கு உணரமுடியாத கல்நெஞ்சு.... நானோ சீக்கிரத்தில் உணர் வடைபவன்! அவன் பேசுவது பெருமை.... நானோ ‘மேலான ருசியை’ மாத்திரமே பேசுகிறவன்!”. இவ்வாறாக எதையெல்லாமோ பேசி மழுப்பிவிட்டு, நம்மை மறைத்துக் கொள்ளவே விரும்புகிறோம்! ஆனால், நம்மை ஆவியானவருக்கு முன்பாக நிறுத்தி விட்டால், அவர் எதையும் விட்டு வைக்கமாட்டார்! நாம் வஞ்சிக்கப்பட இடம்தர மாட்டார்! மாறாக, சர்வவல்லவரின் ஆராய்ந்து அறியும் கண்களுக்கு முன்பாக நிறுத்திவிடுவார்!

தேவனுடைய கிருபையை பெற்றவர்கள் மாத்திரமே “இவன் தன்னை தவிர எல்லோரையும் நேசித்தான்!” என்ற சாட்சி பெற்றிருப்பார்கள்! இந்த சாட்சியை பெறுவது, கிறிஸ்துவின் கிருபைக்குள் சாத்தியமே ஆகும்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!