பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
11.01.2018

2.ஒரு மேய்ப்பனின் இதயம் விசாலமாக வேண்டும்!

image

“பிலிப்பிய சபை மக்களைத் தன் இருதயத்தில் வைத்திருப்பதாக” பவுல் கூறினார் (பிலி.1:7). “தங்களுக்கென பிழைத்திருக்கிறவர்கள்” நெஞ்சத்தில், தானும்-தன் கனமுமாகிய, சுய நலமே குடிகொண்டிருக்கும். அந்த இருதயத்தில் “அருகிலிருந்து தன்னைப் பகைக்கும் அயலான் கூட” (ஏதோ தவறு செய்த சொந்த மனைவி, கணவன்கூட) இருந்திட முடியாது! பவுல் குறிப்பிடுவது போல், ஒரு ஊரில் உள்ள சபையின் மக்கள் அனைவரும் அந்த சபை மூப்பனுடைய இருதயத்தில் குடிகொள்ள வேண்டுமென்றால், அந்த இருதயம் எத்தனை விசாலம் கொண்டதாய் இருக்க வேண்டும்!? சுய -நல சுமையிலேயே இருதயம் நசுங்குண்டோர்களுக்கு ‘பிறரை சுமக்கும்’ பாக்கியம் எப்படி கிட்டும்?

ஜனங்களுக்காக நெஞ்சில் பாரமும் கரிசனையும் கொண்டிருப்பதே, கர்த்தருடைய ஊழியனுக்குரிய மாறாத பங்காயிருக்கிறது! இது இல்லாமல், பிரசங்கம் செய்ய விரும்புவதும், ஜனங்களை ஆளுகை செய்ய விரும்புவதும்... வெறும் பரிசேயத்துவமென்றும், அஞ்ஞானமென்றும் இயேசு குறிப்பிட்டார்! (மத்தேயு.23:1,2;லூக்கா.22:25). இவர்கள் ‘ஜனங்களுக்குள் (மந்தைக்குள்) புகுந்துவிட்ட’ கூலிக்காரர்கள், மெய்யான மேய்ப்பர்கள் அல்ல! எனவும் இயேசு திட்டவட்டமாக கூறினார்!! (யோவான்10). மந்தையைப் பாதுகாப்பதும், தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பதும்..... விசால இதயம் கொண்ட மேய்ப்பர்களின் பங்கு என இயேசு கூறி மகிழ்ந்தார்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!