நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

20.11.2025
47. ‘மறைவாய் செய்திட்ட பாவங்கள்’ அவர்கள் மடிக்கே திரும்ப வந்து சேரும்!

தன்னை உத்தம கிறிஸ்தவனாக அறிக்கை செய்து வாழும் யாராயிருந்தாலும் “கிறிஸ்துவைப் போல் அல்லாத சுபாவங்களை” தங்கள் முதுகுக்குப் பின்னால் பதுக்கிவைத்து ஒருக்காலும் வாழ்ந்திட இயலாது! “அந்த கொடிய பாவ பறவைகள்” வானுயரப் பறந்து, அனேகரை பாழ்படுத்தி, முடிவில் அவர்களிடமே திரும்பிவந்து “நித்தியமான பேரிழப்பை” அவர்களுக்கே கொண்டு வந்து வைத்துவிடும்!!
அதுமட்டுமல்ல, அவர்கள் தங்கள் வீட்டில் தனிப்பட்ட - திரைக்குப் பின்னால் விளைவித்த பாவங்கள், பரிசுத்தவான்களின் சபையில், ஓர்நாள் வெடித்து சிதறிவிடும்! என்பதும் மறுக்க முடியாத உண்மை! அது, தான் வெட்டிய குழியில் ‘தானே’ விழுவதுபோலாகிவிடும்!
சபையில் உள்ள விசுவாசியோ அல்லது ஊழியனோ...... அவர்கள் யாராயிருந்தாலும், தங்களுக்கு நேரிட்ட சோதனைகளுக்கு “இரகசியமாய்” தங்களை ‘அந்தகாரத்திற்கு’ ஒப்புக் கொடுத்திருந்தால், அது வெகுவிரைவிலேயே “ஓர் தொத்து நோயைப்போல” அனேகருக்கு ‘மளமளவென்று’ பரவிவிடும். இவ்வாறு, மறைவான தொத்து நோய் கொண்டவன் ‘ஒருவனை’ சபை விட்டுவைத்திருந்தாலும், காலா வட்டத்தில் அந்த சபை சீர்கெட்டுப் போகும்! என்பது தெள்ளத் தெளிவான உண்மையாகும்!
- ரத்னம்
