நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
10.10.2024
41. ‘கர்த்தரோடு குடியிருப்பே’ பரிசுத்தவான்களின் மரணம்!
பரிசுத்தவான் விக்கிள்ஸ்வொர்த், தன் மனைவி கர்த்தருக்குள் மரித்த வேளையில், தன் பிள்ளைகளை அழைத்து, “பெட்டியில் கிடத்தி இருந்த என் மனைவியை அவர்களுக்கு காட்டி, “அம்மா அந்த பெட்டியில் இருக்கிறார்களா?” என்று கேட்டேன். அதற்கு என் பிள்ளைகள் “அம்மா இங்கே இல்லை அப்பா!” என கூறியதும் பெட்டி மூடப்பட்டது. “அவள் கல்லறைக்கா சென்றாள்? இல்லை, கர்த்தரோடு குடியிருக்கவே சென்றுவிட்டாள்!” என்றே அறிக்கை செய்தார்!
இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன். “கிறிஸ்துவோடு குடியிருக்கும்படி சென்றுவிட்ட உங்கள் அன்புள்ளோர்களுக்காக நீங்கள் துயரம் கொண்டாடினால்... உங்கள் மீதுகொண்ட அன்பினிமித்தம், நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்பு கிறேன்: உங்களிடம் பவுல் வேதவாக்கியமாய் குறிப்பிட்ட ‘இந்த தேகத்தின் குடியிருப்பை விட்டு, கர்த்தரிடத்தில் குடியிருக்கவே அதிகமாய் விரும்புகிறோம்’ என்ற சத்தியம் உங்கள் கண்களுக்கு புலப்படாது போனதற்காய் வருந்துகிறேன்!” என கூறினார்!
இன்று திரளான கிறிஸ்தவ ஜனங்களிடம் ‘கிறிஸ்தவ விசுவாசம்’ இல்லை என்றே காண்கிறேன். நீங்கள் மெய்யாகவே கிறிஸ்தவ விசுவாசம் கொண்டவர்களாய்..... தேவனை ஆழமாய் விசுவாசித்திருந்தால் “எதுவானாலும் சரி ஆண்டவரே! நான் நேசிக்கும் ஒருவரை நீர் எடுத்துக்கொள்ள விரும்பினால், அதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்கிறேன்” என்று மாத்திரமே தைரிய வாசகங்களை கூறுவீர்கள். இதுபோன்ற விசுவாசம் ஒன்று மாத்திரமே உங்கள் கண்ணீரை அகற்றிட முடியும்! அல்லேலூயா.
- ரத்னம்