நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
“மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள்” (ஏயin றுடிசனள) என இயேசு குறிப்பிட்டார். ஆம், அன்பையும் ஐக்கியத்தையும் கட்ட உதவாத எந்த வார்த்தைகளும் உபயோகமற்ற வீண் வார்த்தைகள்தான். மனிதர்கள் மிக சாதாரணமாய் கூறும் “மூடனே!” என்ற வீண்வார்த்தைகூட உங்களை எரிநரகத்திற்கு ஏதுவாக்கி விடும்! என இயேசு தன் சீஷர்களை எச்சரித்தார்! (மத்தேயு.5:22). உங்கள் சம்பாஷணை, ஒரு குடும்பத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும், மூப்பருக்கும் சபை மக்களுக்கும்…..... ஐக்கியத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கும் படியே இருப்பதாக! ஒருவருக்கொருவர் கசப்பையும், விரோதத்தையும், பிரிவினையையும் உண்டாக்கும் அன்பற்ற வீண் வார்த்தைகளுக்கு தூர தூர விலகியிருக்கக்கடவோமாக!
நாவை அடக்க “ஒரு மனுஷனாலும்” கூடாது என்ற வசனம் நூற்றுக்கு நூறு உண்மையானதுதான் (யாக்கோபு.3:8). ஆனால் அதே சமயம், மனுஷனால் கூடாதது தேவனால் கூடும்! என்பதும், விசுவாசிக்கிறவர்களால் எல்லாம் கூடும்! என்பதும் நூற்றுக்கு நூறு உண்மையானதேயாகும்! பரிசுத்தாவியின் அபிஷேகத்தால் ஒவ்வொரு நாளும் நிறைந்து, அந்த “அக்கினிமய நாவுகள்” நம் நாவை சீர்த்திருத்தி எப்போதும் அன்பின் தயை நிறைந்த நாவாய் நம் அனைவரையும் மாற்றுவதாக!! அப்போது மாத்திரமே, நம் நாவின் பிரதியுத்திர செய்திகள், கேட்போர் நெஞ்சில் ‘அக்கினிமய நாவுகளை’ எரியச் செய்திடும், ஆமென்.