பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


11.06.2026                                                          24வது வாரம்

ஒரு சீஷன், கர்த்தருக்குள் எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கும் காரணங்கள்?


 குருவைத் தொடரும் உத்தம சீஷன் எப்போதும் தேவனுக்குள் மகிழ்ச்சியாய் இருப்பான். அதன் இரகசியம் யாதெனில் கிறிஸ்துவினால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட “ஜீவ ஊற்று” அவனுக்குள்ளிருந்து சுரந்து பாய்ந்து செல்வதால்தான்! ஆகவே தேவ சமாதானமும் மகிழ்ச்சியும் அவனிடம் எப்போதும் “பளிச்சென்று” காணப்படும். அவனுடைய இருதயத்தை நிறைத்திருக்கும் பூரண தெய்வ அன்பு ‘தேவ கோபாக்கினை’ என்ற பயத்தை முற்றிலுமாய் அகற்றியிருக்கும். இவ்வாறு தேவாதி தேவன் தன்னுடைய ஆண்டவரும் தன்னுடைய இரட்சகருமாய் மாறிவிட்டபடியால் கர்த்தருக்குள் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது அவனுடைய பங்காய் மாறி விட்டது.

 ஏனெனில், தன் வாழ்வில் சம்பவிக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் “கர்த்தருடைய சித்தமே என் பாக்கியம்!” என சிரம் தாழ்த்தி இவன் ஏற்றுக்கொள்வான்!!

 தேவனுடைய சமூகத்திற்கு அடிக்கடி சென்று தன் முழங்காலில் நின்று ஜெபிப்பான். “அல்லேலூயா, அல்லேலூயா..... ஆமென், ஆமென்!” போன்ற வார்த்தைகளை திரும்பத்திரும்ப தன் ஜெபத்தில் சொல்லி தேவனைக் கவர்ச்சித்து விடலாம் என இவன் ஒருபோதும் எண்ணுவதில்லை. மாறாக, மனுஷர் வார்த்தையைக் காட்டிலும், பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய சார்பாக பிதாவிடம் பரிந்துரைக்கும் ஜெபத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பான். இவ்வாறாக, இயேசுவின் சீஷன் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் தேவசித்தத்தை அறிவதற்காக எப்போதும் தன்னை விழிப்போடு வைத்துக் கொள்வான்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!