நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
15.08.2024
33. ஸ்தல சபையில் ‘பிரிவினை அந்தகாரம்’ கூடாது!
“சகோதரனே, இந்த சபையில் குறையுண்டு” என கூறும் உங்களுக்கு ஓர் இரகசியத்தைச் சொல்ல விரும்புகிறேன்: இந்த உலகில் குறைவற்ற சபை போதகன், முழுமையான இறை ஊழியம் அல்லது ஒரு பிழையும் இல்லாத திருச்சபை என்று சொல்லக்கூடிய தரம் எங்குமே இல்லை!
ஆகவே, ‘ஒரு குரங்கைப்போல’ மரம் விட்டு மரம் தாவி உங்கள் சபை ஜீவியத்தை வீணாக்க வேண்டாம். நீங்கள் இருக்கிற இடத்தில் நிலைத்திருங்கள்! தேவன் உங்களிடம் செய்யத் சொல்வதைச் செய்யுங்கள்! உங்களது உடன் சகோதர சகோதரிகளிடம் ‘மாயமற்ற’ அன்பு பாராட்டுங்கள்! உங்கள் ஸ்தல சபையின் தலைவர்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள்! அதாவது, ஆவிக்குரிய தலைவர்களுக்கு ‘கர்த்தருக்குள்’ அடங்கியிருங்கள்! உலர்ந்த எலும்புகள் தேவனுடைய ஆவியைப் பெற்றதும் ஒரு மகா பெரிய சேனையாக எழும்பி நிற்கும் என்பது தேவ வாக்கு! (எசே.37:10).
ஆகவே, பிரிவினையைத் தூண்டும் அந்தகார சக்திகள் அனைத்துக்கும் எதிராக ஒன்றுசேர்ந்து எழுந்து நில்லுங்கள்!
- ரத்னம்