நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
27.06.2024
26. “பரிசுத்தமே” நமது மகிழ்ச்சியின் இலக்கு!
நல்ல உணர்வுள்ள மனிதன் புதிய ஏற்பாட்டின் ஒரு சில பக்கங்களை தியானத்துடன் வாசித்தாலே, சத்திய வேதத்தின் வலியுறுத்துதல் மகிழ்ச்சியை எல்லையாய் வைக்காமல், பரிசுத்தத்தை எல்லையாய் வைத்திருப்பதை மிக எளிதில் கண்டு கொள்ளுவான். ஜனங்களின் இருதயத்தை குறித்த நிலையில் தேவன் அதிக அக்கறை கொண்டிருக்கிறாரேயல்லாமல், அவர்களுடைய உணர்வுகள் எந்த நிலையிலிருக்கிறதோ என்பது அவருக்கு அதிக முக்கியமல்ல. கீழ்ப்படிதல் கொண்டவனாய் தேவசித்தத்தை நிறைவேற்றுகிறவன் மாத்திரமே சந்தேகத்திற்கு இடமில்லாமல் பூரண மகிழ்ச்சி கொண்டவனாயிருப்பான். ஆகிலும், அவனைப் பொறுத்தவரையில் தான் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறான் என்ற கேள்வியல்ல...... தான் எவ்வளவு பரிசுத்தமாயிருக்கிறான் என்பதே முக்கிய கேள்வியாய் அவனுக்குள் குடிகொண்டிருக்கும்!
தான் பரிசுத்தமில்லாது வாழ்ந்து கொண்டு அதேசமயம் ஒருவன் மகிழ்ச்சியை நாடுவது மாபெரும் மதியீனம்! என்பதை அறியக்கடவோம்!
- ரத்னம்