நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
02.09.2021 | 9. ‘ஸ்திரீகளால் கறைபடாதவர்கள்’ நிறைந்த பரலோகம்! |
இரட்சிக்கப்பட்ட ஒருவனை, “ஐந்து ரூபாய் கொடுத்து சிட்டிபஸ்ஸில் ஏறும் அந்த பயணத்தில், அங்குள்ள யுவதிகளால் அவன் கறைபட்டு, அவன் இரட்சிப்பை இழக்க வைப்பேன்!” என்றே அசுத்தபன்றிகளின் மேய்ப்ப னாகிய சாத்தான் கொக்கரிக்கிறான்!
“என்ன, 2 - ளவயபந தாண்டி இறங்கும் இந்த சிட்டிபஸ் பயணத்திற்குள்ளாக என் இரட்சிப்பை இழப்பதா?” என குமுறும் உத்தம சீஷன் மாத்திரமே.... ஆவியில் நிறைவான்! கிறிஸ்துவினுடையவனாய், தன் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்து...‘ஸ்திரீகளால்’ கறைபடாது, “தேவனுக்குமகிமை” சேர்த்து, சிட்டிபஸ்ஸிலிருந்து இறங்குவான்!
இவர்களையே ‘பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்’ என பரலோகம் கொண்டாடுகிறது! யார் இந்த பாக்கியம் பெற்ற பரிசுத்தவான்கள்? என்ற கேள்விக்கு, அங்கு பரலோகம் தந்த பதில் “இவர்கள் ஸ்திரீகளால் கறைபடாதவர்கள்! கற்புள்ள கன்னியர்கள்!!” என எதிரொலித்தது! (வெளி.14:3,4).