நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

05.06.2025
23. பிள்ளைகளின் கல்விக்கூடத்தை விட ‘நம் வீடு’ நற்குணபாடசாலையாக வேண்டும்!

பிள்ளைகளிடம் உள்ள தவறு இன்னதென போதிக்கும் நேரத்தில், அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பயனுள்ள பகுதிகளைக் காட்டுவதும் தாயின் பொறுப்பாகும். இதுபோன்ற பொதுவான அணுகுமுறையோடு நல்ல புத்தகத்தை சிறிதேனும் வாசிக்க அவர்களைப் பழக்க வேண்டும்! அவர்களோடு தினசரி ஜெபிக்க, நேரம் செலவழிக்க வேண்டும்! அவ்வித தியான நேரத்தை ‘சிநேகம் வளர்க்கும் விதமாயும்’ பயன்படுத்த வேண்டும்! கல்வி பாடங்களில் ஒவ்வொரு வருடமும் தேறி வரும் போது, எத்தனையோ ஒழுங்கின்மைகள் அவர்களை விட்டுப் போய்விடும். அவ்வாறாகவே, நமது வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கும் மதியீனம் விலகி, நற்குணம் ஏற்பட வேண்டும்! இவ்வாறு வளர்க்கப்பட்ட குமாரத்திகள், ஒரு நாள் அவர்களும் தாயாக மாறும் போது, தனக்கு போதிக்கப்பட்ட அதே வழியை கைக்கொண்டு பின்பற்றுவார்கள்!
மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சிறுதளவு கூட பாரபட்சம் காட்ட கூடாது! அது மறைவான பொறாமைக்கும் வெறுப்புக்கும் வழி வகுத்து..... முடிவில் சில பிள்ளைகள் சர்வாதிக்கார குணமுடையவர்களாகவும், அந்த வீட்டில் உள்ள மற்ற பிள்ளைகள் அடிமைகளாகவும் மாறிவிட வாய்ப்புண்டு. சில பிள்ளைகளை ஏற்றுக் கொள்வதும், சில பிள்ளைகளை அலட்சியப்படுத்தி வெறுப்பதும் பல குடும்பங்களில் நடந்துவரும் செயலாகவே இருக்கிறது! அவ்வாறு, நம் குடும்பத்திலும் நடைபெறாதிருக்க ஜாக்கிரதை கொண்டு இருப்போமாக!
- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)
