பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
 11.05.2023  

07. ‘சிலுவை சகித்து வாழ’ தேவ பெலன் வேண்டும்! 

சிலுவைப் பாதையில் வெளிப்படும் “தேவ பெலன்” அவமானத்தை எண்ணாமல் சிலுவையை சகிப்பதற்குரிய பூரண வல்லமையையும் தருகிறது என்பதை அனுபவ பூர்வமாய் கண்டவர்கள் வெகுசிலரே!

வாழ்வில் எதிர்கொள்ளும் கடின சூழ்நிலை தன்னைவிட்டு நீங்க வேண்டும் என இயேசு ஜெபித்ததுபோலவே நாமும் ஜெபிக்க முடியும்! ஆனால், உம் சித்தம் இவ்வாறு இல்லாமல், நான் இதன் ஊடாய் செல்ல வேண்டுமென்றால் “என் சித்தம் அல்ல உம் சித்தமே ஆகக்கடவது” என பிதாவின் பாத்திரத்தில் பருகுவதே சிலுவையின் உன்னத வழியாகும்! “இப்பொழுது” வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, இயேசுவை பலப்படுத்தினான் (லூக்கா 22:43) என்ற அற்புதமே இன்றும் “பிதாவின் சித்தம் ஒன்றே” இலக்காய் கொண்டு வாழ்பவர்களுக்கும் நிகழ்கிறது! அவ்வேளையில் இயேசு சந்தித்த பாடுகளுக்கு இந்த “பெலன்” இயேசுவுக்கு போதுமானதாயிருந்தது! அதாவது, யூதாஸால் காட்டிக்கொடுக்கப்பட்டு, கள்ளனைப்போல் கைது செய்யப்பட்டு, முகத்தில் அறையப்பட்டு, தூஷண வார்த்தைகளின் நிந்தைகளை அடைந்து, பகையின் ஆணிகளால் அறையப்படும் வரைக்கும்...... உள்ள சிலுவையை சகிப்பதற்கு இந்த “தூதன்” மூலம் பெற்ற பெலன் இயேசுவுக்கு போதுமானதாயிருந்தது! (லூக்கா 22:47-65). 

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!