நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
06.08.2020 | 7. குடும்பத்தில் ‘சொந்த சகோதரனைப்’ புறங்கூறுவது அபாயம்! |
சங்கீதம் 50:19-22 வசனங்களில் “உன் வாயைப் பொல்லாப்பிற்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்கு கிறாய்....” என தேவன் கூறும் எச்சரிக்கை கேளுங்கள்!
இதுவரை செய்த புறங்கூறுதலுக்காகத் துரிதமாய் தேவனுடைய சமூகத்தைத் தேடி அவரின் இரக்கத்திற்காக கெஞ்சி ஜெபியுங்கள். மாத்திரமல்ல, நீங்கள் புறங்கூறிய ஜனங்களிடம் தீவிரமாய்ச் சென்று மன்னிப்பும் கேளுங்கள்!
1கொரிந்தியர் 5:9-13 வசனங்களில் புறங்கூறுதலைக் குறித்துப் புதிய உடன்படிக்கையின் வார்த்தைகள் கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்த உடன்படிக்கையின் வார்த்தை யாதெனில் ... “தங்களைச் சகோதரன் அல்லது சகோதரி என்று கூறிக்கொண்டு, இன்னும் தொடர்ந்து புறங்கூறுபவர்களோடு... சம்பாஷிக்கக்கூடாது, புசிக்கவும்கூடாது!” அதுமாத்திரமல்ல, இங்கு ஓர் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது யாதெனில், “அந்தப் பொல்லாதவனை உங்களை விட்டுத் தள்ளிப்போடுங்கள்!” புறங்கூறுகிற ஒரு நபர், நல்லவரா? தீயவரா? அல்லது கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கப் பட்டு பேசுகிறாரா? அல்லது வேறு விதமாய் பேசுகிறாரா? என்றெல்லாம் அலசி ஆராய்ந்து பார்க்கத்தேவையே இல்லை ... நிச்சயமாய் இல்லை! “அந்தப் பொல்லாதவனை உங்களை விட்டுத் தள்ளிப்போடுங்கள்” அவ்வளவுதான்.