நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
05.12.2024
49. அவரது ஐக்கியம் இல்லாத வாழ்வு, ஒரு வாழ்வல்ல!
“தீங்கு நாளில் அவர் என்னைத் தமது கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னை கன்மலையின்மேல் உயர்த்தும்” கர்த்தரின் சொல்லி முடியாத பாதுகாப்பை விட, இந்த உலகத்தில் வேறு எந்த பாதுகாப்பை நம் இருதயம் நாடிட முடியும்? (சங்கீதம் 27:5).
பரிசுத்தவான்களின் மேன்மை எங்கு அடங்கியிருக்கிறது? யார் இவர்கள்? தேவனோடு இவர்கள் கொண்டிருக்கும் ஐக்கியத்தை எந்த சமயத்திலும் விட்டு நீங்காது, அவரது ஐக்கியத்தைக் காத்துக்கொண்ட பரிசுத்தவான்கள்! தாங்கள் கண்டடைந்த பாதுகாப்பு ‘உன்னதமானவரின்’ உயர்ந்த மறைவு என்பதை இந்த பரிசுத்தவான்கள் தெளிவாய் கண்டபடியால், அவரது ஐக்கியத்தைவிட்டு பாவமுமோ, சுயமோ, உலக மேன்மையோ அல்லது தாழ்ச்சியோ, உயர்வோ, இன்பமோ அல்லது துக்கமோ.... ஏன், மரணம்கூட அவர்கள் தேவனிடம் கொண்ட ஐக்கியத்தை இழப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள்! இது, எழுத்தின்படியான வர்ணனையான பாதுகாப்பு அல்ல. ஆம், உன்னதமானவரின் பாதுகாப்பை அவரது பரிசுத்தவான்கள் வாழ்ந்து, அனுபவித்தார்கள்! இதுவே உங்கள் பாதுகாப்பாய் மாற தேவன் கிருபை செய்வாராக! ஆமென்.
- ரத்னம்