பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


19.12.2024

51. ஜனங்களுக்காக பரிதவிக்கும் பிரசங்கிகள் இல்லையே!


 ரு பிரசங்கி ஏராளமான வேத பண்டித பட்டங்களை ‘பொதி சுமையைப் போல்’ சேர்த்து வைத்துக் கொண்டாலும், இந்நாட்களில் ஜனங்களிடையே தாண்டவமாடும் பாவங்களின் கொடுமையை குறித்து ‘ஆத்தும வருத்தம்’ அவருக்கு இல்லையென்றால், அவர் பெற்ற வேதபண்டித பட்டங்களால் யாதொரு பிரயோஜனமுமில்லை. டேவிட் லிவிங்ஸ்டன் தன் ஜெபத்தில் அடிக்கடி “ஆண்டவரே, இந்த உலகத்தின் சீழ் பிடித்த பாவங்கள், என்று குணமாகும்?” என்றே கதறினார். பாவத்தில் அழியும் தங்கள் சொந்த சபை ஆத்துமாக்களுக்காக மனபாரம் கொண்டவர்கள், இன்று வெகு சொற்பமே இருக்கிறார்கள்! 

    ஸ்காட்லாந்து தேசத்து ஆண்ருபோனர் வெல்ஸ் என்ற தேவதாசன் படுக்கையிலிருந்து நள்ளிரவு ஜன்னலைத் திறந்து பார்த்து சினிமா கொட்டகைகளிலிருந்தும், சாராய கடைகளிலிருந்தும் சாரை சாரையாய் செல்லும் ஜனங்களைக் கண்டு “ஐயோ இந்த ஜனங்கள் அழிகிறார்களே! நான் என் செய்வேன்? இவர்கள் அழிந்து போகிறார்களே!” என்றே கதறுவார். இதையெல்லாம் பார்க்கும் போது, அவர்களைப்போல் இன்று சபை ஊழியர்களில் பெரும்பாலோர், இன்னமும் கிறிஸ்துவை கற்றுக் கொள்ளவில்லை! இன்றோ, பாரமும் கண்ணீருமற்ற, உயிரில்லாத பிரசங்கங்களை செய்து விட்டு, மீதியான நேரங்களை உலகத்தார் போலவே வாழும் ‘தனக்கானதைத் தேடும் பிரசங்கிகள்தான்’ பெருகி வருகிறார்கள்! என, காண்பது வேதனை!


- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!