பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

சம்பூர்ண சுவிஷேசம்

நிறைவான ஆறுதல்

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: நெஞ்சுக்கு வேண்டும் நிம்மதி! வனாந்திரமாம் இப்பாலைவன வாழ்வில், எம் ஆத்ம தாகம் தீர வேண்டும்! பரலோக சிம்மாசனத்தில் இருந்து புரண்டுவரும் ஒரு நதி உண்டு, அதுவே எம் தாகம் தீர்க்கும் எனக் கேட்டோம்! சுவிசேஷம் அறைகூவிய சேதி அறிந்தோம்...... தாகம் தீர்க்க ஓடிவந்த எமக்கு “நிறைவான ஆறுதல்” தந்த ஜீவ வழியும் கண்டோம்....... ஜீவ தண்ணீரால் எம் தாகம் தீர்த்தோம்!
நன்கொடையாக : ₹ 40

பூரண கிருபை. The Fullness of Grace. Poorana Kirubai

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: ஆன்ம இரட்சிப்பிற்கும் கிருபை..... பாவத்தை மேற்கொள்ளவும் கிருபை..... பெலவீனத்தில் பெலனடைய கிருபை.... பரிசுத்தாவியின் நிறைவிற்கும் கிருபை..... இருதயம் ஸ்திரப்படவும் கிருபை..... துவங்கியதை முடித்திடவும் கிருபை..... இப்படி சொல்லிக் கொண்டே போக.... சொல்லிட முடியா கிருபை.... எந்தன் இயேவில், பூரணமாய் வாசம் செய்ததே....! அவர் சென்ற சிலுவையின் மா வழியில் சீடர்களாய் பின்சென்றே, கண்டடைவோம் பூரண கிருபை!!
நன்கொடையாக : ₹ 40

தேவ சாயல்

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: அன்று ஏதேன் தோட்டத்தில், தான் இழந்த தேவசாயலை மீண்டும் இந்த மண்ணில் பெறுவதற்கு வழிவகுத்த நம் சிலுவைநாதர் இயேசுவுக்கே என்று புகழ் உண்டாகுவதாக!!
நன்கொடையாக : ₹ 80

பரலோக பாசவலை

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: பரலோக பாசவலை. paralooka paasavalai. The Heaven's Net of Loves.
நன்கொடையாக : ₹ 40

தெளிநீரோடை

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: மாசு சூழ்ந்த இந்த பாருலகில் மாசு நீக்கும் தெளிநீர் எங்கே? என மயங்கும் வேளையில், பாவக்கறை நீக்கும் தூய்மையாய்..... லோக சிந்தை அகற்றும் புனிதமாய்..... சுயத்தின் பிணி தீர்க்கும் தீர்த்தமாய்..... கடின இதயம் மாற்றும் மென்மையாய்..... “பரமனின் தெளிநீரோடை” உண்டு என அறிவதும் அதில் மூழ்கி திளைத்து..... “பரமனைப் போலவே” தூய்மை அடைவதும் பாக்கியமன்றோ!!
நன்கொடையாக : ₹ 35

சீயோனே, கெம்பீரி! - O, Rejoice Zion

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: உயிரோட்டமான இந்தப் புத்தகம் . . . . ‘நீர் இல்லாமல் கதி இல்லை!’ என்பதே மெய் விசுவாசம்! ‘தைரியம் இழக்காமல்’ மேல் நோக்கிப் பாருங்கள்! பரலோக ராஜ்ஜியத்தில் ‘உங்கள் வேர்’ செழிக்கட்டும்! ‘அவரோடு தனிப்பட்ட உறவே’ மெய் ஆராதனை! ‘சுயத்தை’ வெறுக்காதவனுக்கும், பாவிக்கும் வித்தியாசமில்லை! காத்திருந்து முன் செல்லுங்கள், ஜெயம் பெறுவீர்கள்! “ஊற்றுத்தண்ணீரே பொங்கிவா!” நமது விசுவாச பாடல்! ஆம்! கர்த்தர் நம்மோடு இருப்பதால், சீயோனே கெம்பீரி!
நன்கொடையாக : ₹ 140

உமது வாக்குத்தத்தங்கள், எமது அலங்காரம்!

உத்தம தேவ தாசர்கள்
சம்பூர்ண சுவிஷேசம்: ‘வாக்குத்தந்தவரே’ நமது சொந்தமாகட்டும்! வெறும் வாக்குதத்தம் என்பதில் வார்த்தை உண்டு, தேவன் இருப்பதில்லை! எனவேதான் “உமது வாக்குத்தத்தங்கள்” என்பதில் வாக்குரைத்த தேவனும், வாக்கு தந்த வார்த்தைகளும் உயிரோட்டமாய் இருப்பதை காண்கிறோம். வாக்குத்தத்தங்களை மாத்திரமே நாடும் இன்றைய கிறிஸ்தவம் “கொடுத்ததை கொண்டாடி, கொடுத்தவரை புறக்கணிக்கும்” இடத்திற்கு சென்றுவிட்டார்கள்! ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குதத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலேதானே ஆணையிட்டார் (எபி.6:13). ‘தன்னையே தந்து’ வாக்குதத்தம் செய்த விந்தையை பாருங்கள்! இந்த விந்தையை அவரது வாக்குதத்தத்தில் கண்டு பெற்றுக்கொண்ட எந்த ஒரு பக்தனும், காலங்கள் எவ்வளவு தாமதித்தாலும், கர்த்தர் நிறைவேற்றுவார் என்பதில் அசையாத விசுவாசம் கொண்டிருப்பான்!
நன்கொடையாக : ₹ 150