நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

01.01.2026
1. ‘தன்னை ஒரு பொருட்டாக’ எண்ணுவது ஆபத்து!

‘ஓசன்னா’ பாடி கொண்டாடிய ஜனங்கள், ஒரு வார இடைவெளிக்குள் அடுத்த வெள்ளிக் கிழமை, திரள் கூட்ட ஜனத்தோடு சேர்ந்து நின்று “இவனை சிலுவையில் அறையும்!” என கூக்குரலிட்டார்கள். தங்களை அண்டிவந்த, பெருமைக்குரிய போற்று தலை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மாத்திரமே, தங்களை ‘தூஷித்தவர்களின்’ தீதுமொழியால் பாதிக்கப்படமாட்டார்கள்!
நீங்கள் தாழ்மையை பெற்று வாழும் மாந்தராயிருந்தால், மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்! தேவனுடைய ராஜ்ஜியத்தில் ‘தன்னை ஒரு பொருட்டாக’ எண்ணிக்கொள்ளும் யாராயிருந்தாலும் அந்த எண்ணம் அவர்களை விட்டு ஒழியும்வரை, அவர்களுக்குள் ஆவிக்குரிய வளர்ச்சி ஏற்படாது! ஆதிமுதற்கொண்டு, இன்று வரை வாழும் பரிசுத்தவான்கள் யாவரும் ‘ஆணவம் அல்லது பெருமையின்’ கொடுமையை அறிந்து அதற்கு தூர விலகி நின்று வாழ்ந்தார்கள். ‘சுவாசத்திற்கு பிராண வாயுவைப்போல’ கர்த்தருக்குள் உயிரோட்டமாய் வாழ தாழ்மையை சுவாசமாய் கொண்டு வாழ்ந்தார்கள்!
- ரத்னம்
