நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

29.01.2026
தன் குருவிற்கு சம்பூரணமாய் அர்ப்பணிப்பதே சீஷத்துவம்!

குருவை பின்பற்றும் தொடரும் உத்தம சீஷன், தேவனுடைய கற்பனைகளை ஏதோ அரை குறையான இருதயத்தோடு அல்ல, தன் முழு பெலத்தோடும் மிகுந்த மகிழ்ச்சியோடும் கைக்கொள்ளுவான்! ஓர் நேர் விகிதாச்சார கணக்கின்படி, இவன் தேவனை எவ்வளவு அதிகம் நேசிக்கிறானோ அதே நேசத்தின் அளவின்படி, அவ்வளவு அதிகமாய் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளுவான். தன் தேவனுக்கு நூறு சதவீதம் கீழ்படிந்திட வேண்டும் என்ற இவனது விருப்பத்தின் மூலதனம், தேவன்பால் கொண்ட பூரண அன்பே ஆகும்!
பிறரை நேசிக்கும் அன்பின் தழல், அவன் உதடுகளை காவல் புரிகிறபடியால், யாரைக்குறித்தும் அவனால் தீங்கு பேசவே முடியாது! இவன், தேவன் தனக்குத் தந்த விலையேறப்பெற்ற வரமாகிய பேசும் திறனை, யாருக்கும் எவ்வித பயனுமில்லாத, மனவேதனைப்படுத்தும் ஜோக்குகளைப்பேசி வீணடிக்கவே மாட்டான்!
அவரது அடிச்சுவடு பிறளாத இந்த சீஷன், தன் முழு சரீரங்களையும், அவைகளில் ஒன்றையும் தனக்கென வைத்துக் கொள்ளாமல், தேவனுக்கென இடைவிடாமல் ‘ஜீவ பலியாக்கிடுவான்’ தான்பெற்ற எந்த ஒரு சிறிய திறமைகூட தேவனிடமிருந்தே தனக்கு வந்தது என்பதை அறிந்திருப்பான். ஆகவே சற்றும் தயக்கமின்றி தன்னுடைய எல்லா தாலந்துகளையும் தன் ஆண்டவருக்கே அர்ப்பணம் செய்திடுவான்!
- ரத்னம்
