அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
19.05.2025
20. இரட்சிப்பை அறிவிக்க வேண்டிய காலம் இதுவே!
நீங்கள் எப்போதாவது நீதி.24:11,12-ஐ வாசித்திருக்கிறீர்களா? “மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப் போகிறவர்களையும் விடுவிக்க கூடுமானால் விடுவி! அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் எந்த மனுஷனுக்கும், அவனவன் கிரியைக்குத்தக்கதாக பலனளியாரோ?”என வாசிக்கிறோம்.
இத்தனை தீர்ப்பான வசனங்களை வாசித்த பிறகும், யார் உணர்வடையாமல் இருக்க முடியும்? இதுவும் வேதத்தில் நாம் காணும் முக்கிய செய்தியல்லவா? மனிதர்களுக்கு வரும் ஆபத்தை நாம் அறிந்தும், அதை அவர்களுக்குக் கூறி அறிவிக்காவிடில், அக்குற்றம் நம்மைச் சார்ந்ததே! எனக்குத்தான் இரட்சிப்பு, அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது எனச் சொல்லுவதில் பயன் ஏதுமில்லை! இவ்வித சாக்குப் போக்கை நம் ஆண்டவர் ஏற்றுக்கொள்ளார். நாம் சத்தமிட்டுகூவி அறிவிக்க வேண்டிய காலம் இதுவே!
- ரத்னம்