அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
12.05.2025
19. ‘சுவிசேஷ ஒளி’ அணைந்திடாமல் பாதுகாக்கப்படட்டும்!
ஒருகாலத்தில், சுவிசேஷ ஒளி மிளிர்ந்த வட ஆப்பிரிக்காவில் மார்க்கபேத தர்க்கங்களால், அந்த நாட்டில் பிரகாசித்த சுவிசேஷ ஒளி அணைந்துபோனது! தங்களுக்குள் “சுவிசேஷ ஒளியை” பாதுகாக்காமலும், அதை அறிவிக்காமலும் இருந்தால், நம் தேசத்திலும் அவ்வாறே நடைபெறும்!
நாம் அனைவரும் சுவிசேஷ தாகத்தாலும், அதைப் பிரகடனம் செய்யும் ஒரே நோக்கத்தாலும் ஐக்கியப்பட்டு, ஆவியின் ஒருமைப்பாட்டில், சுத்த சுவிசேஷத்தை உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரசங்கிப்போமாக! சுவிசேஷத்தின் சம்பூரணத்தை நீங்கள் எத்தனை அதிகம் பெற்றிருக்கிறீர்களோ, அத்தனை அதிகம் ஆத்தும பாரமும், பிறரைக் குறித்த பொறுப்பும் உங்களுக்கு ஏற்பட்டு விடும்.
இன்றைய துயரமோ, சுவிசேஷத்தின் சம்பூரணத்தை வாஞ்சையுடன் அனுபவிக்காத கிறிஸ்தவ விசுவாசிகளே எங்கும் இருக்கிறார்கள்! இவர்களின் ஜீவிய பொக்கிஷசாலை தரித்திரமாய் இருக்கிறபடியால், பிறருக்கும் ‘தரித்திரத்தையே’ கொடுக்கிறார்கள். ஆத்தும இரட்சிப்பிற்கு, சுவிசேஷமே தேவபெலனாயிருக்கிறதென்று நாமெல்லாரும் விசுவாசிக்கிறோமே! தேவ பெலனான அந்த சுத்தாங்க சுவிசேஷத்தை நிறைவாய் பெற்று, நாம் அறிவிப்போமாக!
- ரத்னம்