அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
11.11.2024
46. குறைவுபட்ட ‘அன்பை’ நிறைவாக்கவே கர்த்தர் விரும்புகிறார்!
எந்த அன்பற்ற சூழ்நிலையிலும் “ஐயோ அன்பு காட்ட தவறி விட்டேனே” என உள்ளம் துவண்டு சோர்வடைந்து போவதுதான் பெரும் நஷ்டம்! நம் அன்பின் வீழ்ச்சி எதுவாயிருந்தாலும், நம் கர்த்தரை விட்டு விலகாதிருப்பதற்கே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அச்சமயத்தில் தோன்றும் மனச்சோர்வு ‘தெய்வ அன்பிற்கு’ வேதனையை கொண்டு வந்து தரும் என்பதை அறிவோமாக. என்னோடிருப்பவர் என்னைக் கைவிடார் என்ற விசுவாசம் கொண்டவர்களே அவரை நம்பி, அவரிடம் கிட்டிச் சேர்வார்கள். கர்த்தர் அன்பின் சொரூபியும், அளவிட முடியாத அன்பின் பெருவெள்ளமும் கொண்டவர்!
ஆகவே, தன் அன்பற்ற வீழ்ச்சியை அவரிடம் அறிக்கை செய்யும் யாவருக்கும் அவர் உதவி செய்ய வல்லவர்!
- ரத்னம்