கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் பாரீஸ் நாட்டிற்குச் சென்றிருந்த சமயம், அங்கு நடந்ததோர் வேதாகம கண்காட்சியை நான் காணச் சென்றிருந்தேன். காட்சி சாலையின் சுவரில் ஒரு படம் தொங்கிக்கொண்டிருந்தது. அது ‘களைகளை’ விதைக்கும் ஒரு மனிதனின் காட்சியாகும். படத்தின் கீழ் “களைகளை விதைக்கும் மனிதன்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அவனுடைய முகம் பித்துப்பிடித்த பேயனைப்போல கோர பயங்கரமாயிருந்தது! ஒரு துஷ்ட தேவதையின் முகத்தைப்போல அவன் முகம் எனக்குத் தென்பட்டது. அவனுடைய கரத்திலே களைவித்துக்கள் அடங்கியதோர் கூடை இருந்தது!
அவன் ஒவ்வொரு முறையும் ஒரு களையை பூமியிலே விதைக்கையில், ஒரு பாம்பு ஒன்று அவன் கரத்தின் வழியாக ஊர்ந்து நகர்ந்து ஏறி, அவன் உடலையே நன்றாக வளைத்துச் சுற்றிக்கொள்ளும்! அவனுக்கு சற்று தூரத்திலுள்ள மரக்கூட்டம் நடுவில் பூமியின் நானாவித துஷ்ட மிருகங்களும் குடி இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தப் படமானது என் மனதிலே அப்படியே பதிந்துவிட்டது. ஆம் “களைகளை விதைக்கும் மனிதன்” தன் ஜீவியத்திலோ, அல்லது தன் சினேகிதர் ஜீவியத்திலோ களைகள் விதைப்பது ‘உயிர் கொல்லும் துஷ்டம்’ என இந்த சித்திரம் எச்சரித்து விளக்கியிருந்தது!
என் அருமை வாலிபர்களே, நீங்கள் களைகளை விதைத்தால் களைகளையேதான் அறுப்பீர்கள். மதுவிற்போரும், சூதாட்டக்காரர்களும், கொலைபாதகரும், துன்மார்க்க கூ.ஏ மற்றும் மொபைல் காமவிகார காட்சி கொண்டு, மற்றவர்களை நாசமடையப்பண்ணியவர்களும், அவர்களோடு சேர்ந்து நாசமடைகிறவர்களும், மனந்திரும்பாமல் பரலோகத்திற்குள் பிரவேசிக்கக்கூடும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ? இல்லவே இல்லை, களைகளை விதைக்கும் அவர்கள், களைகளையேதான் கட்டாயம் அறுக்க வேண்டும்! இந்த தெய்வ பிரமாணத்தை எச்சரிக்கையாய் எடுத்துக்கொண்டு, மனந்திரும்புங்கள்!