பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
10.03.2023

நித்தியம் வரை பின்தொடரும் நமது நினைவுகள்!

 நாம் இந்த உலகத்தை விட்டு மறுமைக்குள் கடந்து செல்லுகையில் இந்த உலகத்தில் நமக்குள்ள நினைவுகள் அனைத்தும் மறுமை உலகத்திற்கும் தொடர்ந்து வருகின்றது என்பதைப் பரிசுத்த வேத புத்தகம் மிகத் தெளிவாக ரூபகாரப்படுத்துகின்றது. “மகனே அதை நினைத்துக்கொள்” என்று தேவன் சொல்லும்போது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதை நினைவு கூர்ந்தே தீர வேண்டும்! நாம் இந்த உலகத்தில் சிறிதும், பெரிதுமான எவ்வளவோ காரியங்களைச் செய்கின்றோம். அவை அனைத்தும் நித்தியமாக நமது நினைவிலிருந்து அற்றுப்போயிற்று என்றும் நினைத்துக் கொள்ளுகின்றோம். 

  ஜாண் காஃப் என்பவர் தனது தாயைப்படுத்தின பாடுகளைக் குறித்துப் பேசுகையில் “என்னை உயிரோடு கொல்லும் அந்த நினைவுகள் என்னைவிட்டுப் போகக் கூடியது சாத்தியமானால் எனது வலது கரத்தையே அதற்கு விலைக்கிரயமாக வெட்டிக் கொடுக்கத் தயார்” என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். அந்த நினைவுகள் அவனது கல்லறை வரை அவனைத் தொடர்ந்து செல்லும். அவன் அதை எக்காலத்தும் மறக்கவே இயலாது!

  இந்த உலகத்தில் நாம் செய்த அநேக செயல்கள் நம்மால் மறக்கப்பட்டு போய்விட்ட போதினும், அவைகள் யாவும் நம் நினைவின் ஆழத்தில்தான் இன்னும் புதையுண்டு கிடக்கின்றன. அவை யாவற்றையும் தேவன் ஒன்றன் பின் ஒன்றாக நம் நினைவுக்கு கொண்டு வருகையில், அவை யாவும் திரும்பவுமாக நம் நெஞ்சில் பசுமையாகத் துளிர்விட்டுத் தோன்றும். “மகனே அதை நினைத்துக்கொள்” என்று கர்த்தர் சொல்லுகையில் நமது நினைவின் இரகசிய நரம்பைக் கர்த்தர் தொடுவார். உடன் தானே, மறைந்து கிடக்கும் அனைத்து நினைவுகளும் பொங்கி வரும் நீர் ஊற்றைப் போன்று கொப்பளித்துக் கொண்டு வரும். நாம் அவற்றை ஒருக்காலும் மறக்கவியலாது. மாறாக நாம் அவற்றை நினைவுகூர்ந்தே தீர வேண்டும். 

  சுவிசேஷ நற்செய்தி என்னவெனில், நாம் மனம் வருந்தி “அறிக்கை செய்யும்” பாவங்கள் முழுவதையும் இயேசு மன்னித்து, நம்மை இரட்சிப்பார்! என்பதேயாகும்.

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!