கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
பூர்வீக பரிசுத்த தேவ மனிதன் அம்புரோஸ் என்பவரின் மரண சமயம் அது! அவரைக்காண சில வாலிபர்கள் அவருடைய அறைக்குள் நுழைந்தனர். அந்த வாலிபர்கள் அனைவரும் பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருந்தவர்கள்! மரணக் கட்டிலையும், அதின் மேல் படுத்திருந்த பரிசுத்தவான் அம்புரோசின் தெய்வீக சாயலையும், அவருடைய முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த பரலோக திவ்விய சமாதானத்தின் அமைதியையும், பரலோகம் செல்ல துடித்துக் கொண்டிருந்த அவரது ஆனந்த ஆர்வத்தையும் கண்ட அந்த வாலிபர்களில் குறிப்பிட்ட ஒருவன் “நான் மரிப்பதானால் இந்த அம்புரோஸ் பரிசுத்தவானைப் போலத்தான் மரிப்பேன்” என்று தன்னையே மறந்து அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அந்த அறையில் கூடியிருந்தோர் நெஞ்சமெல்லாம் ஆனந்தப் பரவசத்தால் சில்லெனக் குளிர்ந்தது!
இரு சாராரான மாந்தர் மரணத்தைச் சந்திக்கும் விதத்தை நாம் மேலே கண்டோம். ஒரு சாரார் மரணத்தைக் கண்டு நடுநடுங்கி அதைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு பின் நோக்கி ஓட்டம் பிடிக்கையில் மற்றொரு சாரர் மரணத்தை மட்டற்ற மகிழ்ச்சியுடன் வரவேற்று அரவணைத்து அதின் வழியாக நித்திய பேரின்ப வீட்டிற்குக் கடந்து செல்லுகின்றனர். காரணம், முந்தினோர் ஆண்டவர் இயேசுவையும் அவருடைய விலையேறப்பெற்ற இரட்சிப்பையும் பெற்றுக்கொள்ளாத மக்கள். ஆனால் பிந்தினோர், இரட்சகர் இயேசு அருளிய மாட்சிமையான இரட்சிப்பைப் பெற்று அவருக்குள் பரிசுத்தமாக வாழ்ந்த மக்கள்! அவர்கள் தங்கள் இரட்சகரில் பெற்ற அந்த இரட்சிப்பே மரணத்தை அத்தனை தைரியத்தோடும் முக மலர்ச்சியோடும் சந்திக்க அவர்களுக்குப் பெலன் அளித்தது.
ஓ, வாலிபனே உன் வாழ்வின் ஓட்டம் கிறிஸ்துவுக்குள் ஆரம்பித்து கிறிஸ்துவுக்குள் முடிவதே உயர்ந்ததும் நித்தியமுமான இலட்சியமுமாகும்!