பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
14.04.2023

வாலிபனே, உன்னையே பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கை வீண்!

  ஒரு பெரிய வெள்ளைப்பன்றி தனது குட்டிகளோடு நிற்கும் காட்சியை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, கர்த்தர் என்னோடு பேசினார். இந்தப் பூலோகத்தை கடந்து செல்லும் திரளான மாந்தர் இந்தப் பன்றியைப் போலத்தான் கடந்து செல்லுகின்றனர். அந்த மக்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு நோக்கமும் கிடையாது! எங்கும் அலைந்து திரிந்து நன்றாக சாப்பிடவேண்டியது, வயிறு முழுமையாக நிறைந்துவிட்டால் அப்படியே படுத்து நித்திரை செய்ய வேண்டியது, சில பன்றிகளாக ஒன்று சேரும் நேரம் தங்களுக்குள் எதை எதையோ கொஞ்ச நேரம் அவைகளின் மொழியில் சம்பாஷித்துக் கொள்ள வேண்டியது, அவ்வளவுதான். அதில் மகிழ்ச்சியும் இருக்கலாம், துயரமும் இருக்கலாம், பின்னர், ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் கொல்லப்பட்டு மாந்தருக்கு இரையாகி மறைய வேண்டியதுதான்! அத்துடன் அந்தப் பன்றியின் காரியம் முடிவடைகின்றது. 

   இந்த உலகத்தில் அநேகருடைய வாழ்வும் அதைப்போன்றுதான் உள்ளது. தாங்கள் உண்டு, தங்கள் குடும்பம் உண்டு என்று தங்களுக்காகவே வாழ்ந்து, தங்களுக்காகவே உண்டு, உடுத்தி, உறவு கொண்டு வாழ்ந்து, திடீரென மாண்டு தன் மண்ணுக்குத் திரும்புகின்றான்! தனக்காக ஜீவன் கொடுத்த கர்த்தரையோ, தனது ஜீவசுவாசத்தை தனது கரங்களில் வைத்திருப்ப வரையோ, தன்னைச் சுற்றியுள்ள ஏழை எளிய மக்களையோ பற்றி அவன் கண்டு கொள்ளுவதுமில்லை, கவலை அடைவதுமில்லை. இரக்கம் கொள்ளுவதுமில்லை! “கர்த்தரை சேவிப்பது விருதா” “பரிசுத்தமாக வாழ்வது, ஜெபிப்பது, வேதம் வாசிப்பது அனைத்தும் விருதா” என்று அவன் நினைக்கின்றான். அவன் இருப்பதாலோ அவன் இறப்பதாலோ யாருக்கும் எந்த ஒரு பயனும் கிடையாது! தமிழ் பழமொழி ஒன்று சொல்லுவதுபோல “ஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன? எட்டி மரம் காயாது இருந்தென்ன? காய்த்துப் பலன் என்ன?” (மற்றவர்களுக்கு ஈகை செய்யாத ஈரமில்லாத மக்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் இல்லாதிருந்தாலும் ஒன்றுதான். கசப்பான காய்களை காய்க்கக்கூடிய எட்டி மரம் காய்த்துதான் என்ன பயன்? காயாமல் இருந்தாலும் அதினால் ஒன்றும் ஆகப் போவதில்லை). 

  இந்த உலகத்தில் தன்னை இரட்சித்திட தன் ஜீவனைத் தந்து உயிர்த்தெழுந்த இரட்சகரை அறிந்து  வாழாதபடியால், அவர்களுடைய வாழ்க்கை இருளாய் மாறுவது சரிதானோ?


- வாலிபம் யேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!