பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
10.04.2022

ஓ வாலிபனே, எந்த துன்பத்திலும் அச்சமில்லாது வாழ முடியும்!

பூமியிலிருந்து ஒரு அடி உயரத்திற்கும் சற்று உயரமான ஒருவித அதிசய வெள்ளாடுகளை திபெத் நாட்டு லூநாக் நதிக்கரையில் நான் கண்டேன். மிகவும் செங்குத்தான, உயரமான மலைப்பாறையின் உச்சியில் இந்த ஆடுகளில் சில நின்றுகொண்டு, தங்களுக்கே உரித்தான பாணியில் துள்ளித் துள்ளி விளையாடிய பாங்கினைக் கண்டு வியப்படைந்தேன். ஒவ்வொரு சமயமும் பாறையின் மகா பயங்கரமான விளிம்பினுக்கே அவைகள் வர ஆசைப் படுவதையும், அந்த விளிம்பிற்கு வந்ததும் அங்கிருந்து ஒரு துள்ளல் போட்டுக்கொண்டு ஓடுவதையும், திரும்பவும் அது பாறையின் விளிம்பிற்கு வருவதையும் அங்கிருந்துகொண்டு செங்குத்தான பூமியை எட்டிப்பார்த்து மகிழுவதையும், மறுபடியும் தங்கள் பின்னங்கால்கள் இரண்டையும் உயரத் தூக்கி ஒரு துள்ளல் போட்டுக்கொண்டு ஓடிச் செல்லுவதையும் கண்டு மிகவும் வியப்படைந்தேன்! மேற்கண்ட ஆடுகளைப்போலத்தான் தேவன் தம்முடைய பிள்ளை களாகிய நமக்கும் அற்புதமான பாதங்களையும், நடுக்கமடையாத வலுவான கால்களையும் அளித்திருக்கின்றார். ஆம், “அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்” (ஆப.3:19). நம்முடைய ஜீவிதப் பாதை முழுவதும் இடர்களும், இன்னல்களும், கண்ணீர்களும் நிறைந்த செங்குத்தான மலைப் பாறைகள்தான். ஆனால் நாம் அவற்றைக் குறித்து அஞ்சவேண்டியதில்லை. அதுதான் மெய்யான தேவப் பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவரின் பாதையுமாகும் (அப்.14:22). அதைக் கண்டதும் கர்த்தருக்குத் துதி செலுத்தி அவர் மார்பில் சாய்ந்துகொண்டு, ஆனந்தக் களிப்புடன் முன்நோக்கிக் கடந்து செல்ல வேண்டியதுதான்! தங்களுக்கு முன்னாலுள்ள மரணப் பள்ளத்தாக்கைக் கண்ட அந்த ஆடுகள் பயந்து நடுங்கவில்லை. மாறாக, களிகூர்ந்து குதித்து மகிழ்வுற்றன. நாமும் தேவ பெலத்தால் அப்படிச் செய்வதையே கர்த்தர் விரும்புகின்றார். ஓ வாலிபனே, ஒரு காட்டு வெள்ளாட்டிற்கு ‘அச்சமில்லாத வாழ்வு’ தரும் ஆண்டவர், உனக்கு சொந்தமாக வேண்டாமா? ‘பாவமும்’ ‘பயமும்’ இரட்டையர்கள்! இன்றே இயேசுவை விசுவாசித்து ‘பயமில்லாத’ வாழ்க்கை வாழ உன்னை ஒப்புக்கொடு!


- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!