பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!


16.10.2025

உலக இன்பம் ஓர் மாயவலை! விடுதலை தருபவர் இயேசு!!

  11 பிள்ளைகளைக் கொண்ட மிகப் பெரிய குடும்பம்! எனவே, தாயும் தகப்பனும், ஏன்? ஆண்மக்கள் 10 பேர்களும் கூட அந்த கஷ்டகாலத்தில் கடினமாக பாடுபட்டு உழைக்க வேண்டிய ஏழ்மையில் இருந்தோம். ஆண் மக்களாகிய நாங்கள், அக்கம் பக்கத்திலுள்ள விவசாயிகளுக்கு வயல் வேலை செய்து கொடுத்து, பணம் சம்பாதித்ததுடன், வழக்கத்துக்கு மாறான அற்பமான துப்புரவு பணிகளையும் கூட செய்து கொடுத்து, எங்கள் தேவைக்கு பணம் சம்பாதித்தோம்! “கோபோர்த் பையன்கள் நல்ல சுறுசுறுப்பான, எந்த ஒரு வேலையையும் செய்ய அஞ்சாத திறமைசாலிகள்” என்று அந்த பகுதியிலுள்ளவர்கள் எல்லாரும் அவர்களைக் குறித்துப் பேசினார்கள். பிற்காலத்தில், கோபோர்த் அவர்களே அதைக் குறித்துப் பேசும்போது “ஹாமில்டன் என்ற இடத்திலிருந்து இலண்டனுக்கு அருகில் நாங்கள் வசித்த இடம் வரை 70 மைல்கள் தூரத்தை, எனது தகப்பனார் தனது முதுகில் ஒரு சாக்கு மூட்டை மாவுடன் நடந்து வந்திருக்கின்றார். அவர் நடந்து வந்த பாதை அந்த நாட்களில் முட்புதர், செடிகொடிகள் மண்டிக் கிடந்த பாதையாகும்” என்று கூறுவார்.

  எனது அருமைத் தாயார், பிள்ளைகளாகிய நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எங்களுக்கு தேவனுடைய வசனங்களைப் போதிப்பதிலும், எங்களோடு கூட சேர்ந்து ஜெபிப்பதிலும் மிகவும் கருத்தோடிருந்தார்கள். எனது வாழ்க்கையின் பிற்காலத்தில் நான் “சீனாவின் மிஷனெரியாகச் சென்ற” பெரிய தேவ ஆசீர்வாதத்திற்கு காரணம், எனது தயாருக்கு நான் சங்கீதங்களின் புத்தகத்தை வாசித்ததுதான்! நான் ஐந்து வயதினனாக இருந்த அந்தச் சமயத்தில், எனது தாயாருக்கு சங்கீதங்களைப் பிழையின்றி சப்தமாக வாசிப்பேன். சப்தமாக வாசித்து, வாசித்து தேவனுடைய வார்த்தைகள் மேல் எனக்கு ஒரு பரலோக இன்பமே ஏற்பட்டுவிட்டது! அதின் காரணமாக ஏராளமான தேவனுடைய வசனங்களை நான் மனப்பாடம் செய்தேன்.

  அந்த சின்ன வயதிலேயே நான் என்னை ஆண்டவருக்கு ஒப்புவித்து, ஒரு மெய்யான கிறிஸ்தவனாக வாழ்ந்திட, என் தாயும் தகப்பனும் எனக்கு “அஸ்திபாரமாய்” மாறினார்கள்! ஓ வாலிபனே, மந்த இருதயம் (சோம்பல் இருதயம்) கொண்ட இன்றைய கிறிஸ்தவத்தைக் கண்டு ஏமாந்து போகாமல், தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் நேசித்து வளருங்கள்! அப்படியிருந்தால், ஏற்ற காலத்தில் உங்களைக் குறித்த வாழ்வின் நோக்கத்தை தேவன் நிறைவேற்றுவார்!        

 - வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!