பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
09-09-2019

9. நம் ஜீவிய கடிகாரமுள், நித்தியம் தொட வேண்டும்!

சரித்திரம் ஆரம்பமான காலமுதல் மனிதவர்க்கமானது காலத்தை கணக்கிடப் பற்பல ஏதுக்களைப் பயன்படுத்தி வந்திருக்கின்றது. பூர்வீக காலங்களில், காலத்தை அளவிடச் சூரிய பாகை பயன்படுத்தப்பட்டதை வேதாகமத்தில் நாம் காண்கிறோம் (ஏசா.38:8). காலத்தை அளவிடப் பூர்வத்தில் தண்ணீர் கடிகாரமும் பயன்படுத்தப்பட்டது. மணற்கடிகாரத்தைப் போன்றே, ஒரு பாத்திரத்திலுள்ள தண்ணீரானது பிறிதொரு பாத்திரத்திற்குள் சொட்டுச் சொட்டாக சிறிய துவாரம் ஒன்றின் வழியாக விழுந்து கொண்டிருக்கும் அளவை வைத்து காலத்தை கணித்தார்கள். பூர்வீகப் பாபிலோனியர்கள், காலத்தை நட்சத்திரங்களைக் கொண்டு கணித்து வந்தனர்.

ஆரம்ப காலத்தில் சீனர்கள் முடிச்சிடப்பட்ட எரியும் கயிற்றின் உதவியால் (முnடிவவநன க்ஷரசniபே சுடியீந) நேரங்களைக் கணக்கிட்டதாகக் கூறப்படுகின்றது. அளவுகள்படி செய்யப்பட்ட எரியும் மெழுகுவர்த்தி களாலும் காலம் அளவிடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

புரதான காலத்து பற்பலவிதமான கால அளவுக் கடிகாரங்கள், மாற்றமுடியாததும், ஸ்திரமானதுமான ஒரே ஒரு விஷயத்தைத்தான் இன்றும் ஆணித்தரமாக நமக்குச் சுட்டிக் காண்பிக்கின்றது. அது என்னவெனில், “காலம் கடந்துகொண்டேயிருக்கின்றது. என்றாகிலும் ஒருநாள், நம்மனைவரின் இவ்வுலக ஜீவியத்தின் கடிகாரம் நின்றுவிடும்! ஆகிலும், நம் எல்லோருக்கும் நற்செய்தி ஒன்று உண்டு! நம் ஆத்துமாவை இரட்சிக்க, இந்த உலகம் வந்த இயேசு ரட்சகர் சிந்திய ரத்தத்தால், பாவ மன்னிப்பும் புதுவாழ்வும் பெற்றவர்களின் கடிகாரம் இந்த உலக ஜீவியத்தோடு நிற்பதில்லை! அது, “நித்திய ஜீவனுக்குள்” நம்மை நடத்தி, என்றென்றும் ‘தெய்வ வாழ்வின் நித்தியத்தில்’ தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்திட முடியும்!”.

ஓ, வாலிபனே! இந்த மதிமயக்கும் மாயலோகம் ‘மாயை’ என்றும், நித்தியமே வாழ்வின் இலக்கு! என்பதை அறிந்து தெய்வ பயத்துடன் உன் சிருஷ்டிகரை அண்டி வாழ, அவரிடம் உன் ஜீவியத்தை ஒப்புக்கொடுத்து, உன் ஜீவிய கடிகாரமுள், நித்தியத்தை தொடுவதாக!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!