பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

15.08.2026

வாலிபனே, மாய வாழ்வு அல்ல ‘நித்தியமே’ உன் மகிழ்ச்சியாகட்டும்!

 நான் இப்போழுதுதானே வாலிபன், நான் கிழப்பருவத்தை எட்ட இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளோ இருக்கின்றனவே! “கிழப்பருவம் வரும்போது மரணத்தை குறித்து யோசிக்கலாம்” என்று ஒரு வாலிபன் எண்ணுவது தவறு. கல்லறைத் தோட்டத்திலுள்ள கல்லறைகள் எல்லாம் கிழவர்கள், கிழவிகளின், கல்லறைகள் மாத்திரம் இருக்கவில்லையே! சிசு பருவம், பிள்ளை, வாலிபம், நடுத்தர பருவம், விருத்தாப்பியம் ஆகிய சகல நிலைகளிலும், மண்ணின் மாந்தர்கள் மரணத்தைச் சந்தித்து, புதைகுழிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனரே!

 நமது பாக்கியமான நல் மரணத்தைக் குறித்து நமக்கு ஒரு வாஞ்சை இருப்பது தவறல்ல! ஆனால், “நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக, என் முடிவு நீதிமான் முடிவுபோல் இருப்பதாக” (எண்.23:10) என்று ஆவல் கொண்ட பிலேயாமின் ஆசை நிறைவேறாமற் போயிற்றே! உண்மை என்னவென்றால், நாம் அவனைப்போல ஆசை கொண்டு, தேவ பெலத்தால் அந்த பரலோக ஆசையை கட்டாயம் நிறைவு செய்து விடவேண்டும்!

 தனது மரணப்படுக்கையிலிருந்த ஒரு கிறிஸ்தவ ஜசுவரியவான் மனிதரை நான் சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்து “முடிஞ்சிருச்சி எல்லாம் முடிஞ்சிருச்சி” என்ற வார்த்தைகளை மிகுந்த துக்கத்தோடு கூறி, ஓரிரு தினங்களில் இந்த உலகத்தைவிட்டு கடந்து சென்றார்! தனது பரம தகப்பனுடைய வீட்டுக்கு ஆனந்த களிகூருதலோடு கடந்து செல்ல வேண்டிய அந்த மனிதர், முற்றும் நம்பிக்கையற்றவராக தனது நித்திய யாத்திரையை தொடங்க வேண்டியதாயிற்று! அதுவே, நமது வருத்தம். ஆனால் நமது ஓட்டமோ கர்த்தருக்குள் மிகுந்த நிச்சயத்தோடு ஓடி முடிக்கப்படவேண்டும். அப்போஸ்தலன் அதைக்குறித்து எழுதும்போது “நான் நிச்சயமில்லாத வனாக ஓடேன், ஆகாயத்தை அடிக்கிறவனாக சிலம்பம் பண்ணேன்” (1கொரி.9:26) என்று குறிப்பிட்டார். ஆகவே வாலிபனே, ஓர் நிலையற்ற நிர்ப்பந்தமான நிலை நமக்கு வராமல், அன்பின் கர்த்தர் நம்மை காத்துக்கொள்ள, இந்தக் கிருபையின் நாட்களில் இயேசு இரட்சகரை அண்டி, நீடித்த நித்திய ஜீவனைப் பெற்று வாழ்வாயாக!  

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!