பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
03.06.2021

சாட்சியாய் வாழ்ந்த பக்தர்களின் புத்தகம், இரட்சிப்பை கொண்டுவரும்!

இல்லினாய்ஸ் என்ற பட்டணத்தில் டைவ்ஸ் என்ற தெருவிலுள்ள ஒரு ஐசுவரியமுள்ள மனிதரின் வீட்டின் கதவை கர்த்தருடைய ஓர் ஊழியர் தட்டி நின்றார். அப்பொழுது வீட்டின் எஜமாட்டி வந்து “ஐயா, உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள். “கிறிஸ்தவ கைப்பிரதி கழகத்தின் தனித்தாள் ஊழியர் நான். அதோ கூடையில் இருக்கும் சிறந்த பக்தர்களின் கிறிஸ்தவ புத்தகங்களை நான் விற்பனை செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றேன்” என்று பதிலளித்தார். “எங்கள் வீட்டில் ஒரு பெரிய கிறிஸ்தவ புத்தகசாலையே இருக்கின்றது” என்று அந்த அம்மையார் கூறினார்கள். அந்த கூர்மையான பதிலில் மனமடிந்து விடாமல், தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, அந்த பெரிய வீட்டை ஒரு தடவை சுற்றும் முற்றும் பார்த்தவராக “ஆனால், உண்மையில் நான் ஜாண் பன்னியன், ரிச்சர்ட் பாக்ஸ்டர், ஃப்ளேவல் போன்ற பக்த சிரோன்மணிகளின் கால்களாக நான் இருந்துகொண்டு, அவர்களுடைய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கின்றேன். அந்த பரிசுத்த பக்தர்கள் எல்லாரும் அதோ அந்தக் கூடையில்தான் இருக்கின்றனர்” என்று சொன்னார். “வெறுமனே கிறிஸ்தவ புத்தகங்களை மட்டும் விற்பனை செய்து கொண்டு செல்லுபவன் நான் அல்ல. அவைகள், கிறிஸ்துவை வாழ்ந்து காண்பித்த பரிசுத்தவான்களின் புத்தகங்கள்! என கூறினார். அந்த அம்மையாரோ “நான் இங்குள்ள சபையின் அங்கத்தினன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அம்மையார் பதில் அளித்தார்கள். “உங்களைப்போல நானும் ஒரு சபையின் அங்கத்தினன்தான். ஆனால், ஆண்டவர் நமது தேவாலயத்துக்கு வந்து, தேவாலயத்தின் பதிவேடுகளைப் புரட்டி, நமது பெயர் அங்கு பதிவு பண்ணப்பட்டிருக்கின்றதா? என்பதைப் பாராமல் நமது பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றதா? என்பதை மட்டும்தான் பார்ப்பார் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது” என்றார் ஊழியர்! “உண்மைதான், நாம் எந்த ஒரு சபை பிரிவையும் மாத்திரம் சார்ந்திருப்பது மட்டும் போதாது. நீங்கள் என்னுடைய பரிசுத்த தாயாரைப்போன்று பேசுகின்றீர்கள். இப்போது, என் இரட்சகரை என் இருதயத்தில் ஏற்றுக்கொள்கிறேன்” என கண்ணீரோடு ஜெபித்தார்கள்.

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!