பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
04.03.2024

ஓ வாலிபனே, “நீ பயனுள்ளவனாய் மாற” கிறிஸ்துவிடம் வா!

 “தேவன் தமது பிள்ளைகளின் வாழ்வில் துன்பங்களை ஏன் அனுமதிக்க வேண்டும்?” என்றதோர் கேள்வியை அவிசுவாசியானதோர் மனிதன், தேவ பக்தியாய் ஜீவித்ததோர் கிறிஸ்தவக் கொல்லனிடம் சவாலாக முன் வைத்தான். இன்றும், எண்ணற்ற மாந்தர்களின் கேள்வியும் இவ்வாறாகவே இருக்கிறது! அந்த அவிசுவாசிக்கு, அக்கிறிஸ்தவக் கொல்லன் கீழ்கண்டவாறு மாறுத்தரம் அளித்தார்: “நான் ஒரு சிறிய துண்டு இரும்பை எடுத்து அதனை அக்கினியில் வைத்துப் பழுக்கக் காய்ச்சி எடுத்து, பட்டறைக் கல்லில் வைத்துப் பதமாக்கி, நன்கு அடிக்கின்றேன்! பின்னர், அதனைத் தண்ணீரில் போட்டு வெப்ப நிலையை மாற்றி மீண்டும் நெருப்பில் போட்டுப் பழுக்கக் காய்ச்சி எடுத்து, நன்கு அடித்து மிகவும் பயனுள்ளதோர் பொருளை அதிலிருந்து உருவாக்குகின்றேன்”. அதுமாத்திரமல்ல “பழுக்கக் காய்ச்சிப் பட்டறைக் கல்லில் வைத்து நான் முதன்முறை அடிக்கும்போது, அது பக்குவமாகக் காணப்படா விட்டால், நான் உடனே அதை உலோகக் கழிவுத்தொட்டியில் வீசி எறிந்து விடுகின்றேன்” என்ற உண்மையையும் எடுத்துரைத்தார்! கேள் வாலிபனே, “நான் பக்குவமடைகின்றேனா? என்பதனைப் பரிசோதிக்கவே தேவன் என்னைப் புடமிடுகின்றார் என்றே நான் விசுவாசிக்கின்றேன்! என் முழு இருதயத்தோடும்,  என் பாடுகளை நான் மிகவும் பொறுமையுடன் சகிக்கின்றேன்!” என கெம்பீரமாய் கூறினார்! மேலும், நான் நாள்தோறும் ஆண்டவரை நோக்கி “ஆண்டவரே, உலைக்கல அக்கினி எனக்கு அவசியம் என்று நீர் கருதும் பட்சத்தில், அக்கினியில் வைத்து என்னைக் காய்ச்சும்! நீர் என்னை எதுவேண்டு மானாலும் செய்யும்! ஆனால், ஓ என் அன்புள்ள ஆண்டவரே, எந்நிலையிலும் என்னைக் கழிவுத்தொட்டியில் மாத்திரம் ஒன்றுக்கும் பயன்படாது என்று வீசி எறிந்து போடாதேயும்” என்று ஜெபிக்கின்றேன் என்று அக்கொல்லன் கூறினான்! அந்த உண்மையுள்ள கொல்லனின் பதில், அந்த வாலிபனை, அன்றே மனந்திரும்பச் செய்தது!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!