பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!


15.03.2025

வாலிபனே, தேவனை கிட்டிச்சேர ‘உன் விசுவாசமே’ தேவை!

 தேவன் உங்களுக்கு வெகு தூரமானவர் என ஜனங்களை நம்பவைத்த பிசாசு ஓர் கொடூர பொல்லாங்கன்! தேவனை நீங்கள் கிட்டிச்சேர வேண்டிய தேவை எவ்வளவு அதிகம் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதிகமாய் அவனது பொய்யின் வஞ்சகத்தை நம் மனதில் புகுத்திட தீவிரம் கொள்கிறான். நான் ஒருசமயம், சுகவீனமான என் மனைவியைவிட்டு சுமார் 7-மணி நேர பிரயாண இடைவெளியில் இருந்தபோது என் உள்ளம் மிகவும் சோர்ந்துபோனது! ஆனால் நான் ஊழியம் செய்த கிராமத்தில் டெலிபோன் இருப்பதை அறிந்து, அங்கு ஓடோடிச் சென்று என் மனைவியிடம் 2-நிமிடத்திற்குள் தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம்! ஆம், சோர்வுற்ற என் மனைவி பெலனடைந்து தன் பூரண மகிழ்ச்சியை என்னிடம் பகிர்ந்து கொண்டாள்.... நானும் என் மனஉளைச்சலிலிருந்து அந்த சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டேன்! இதில் என்ன இரகசியம்? எனக்கும் என் மனைவிக்கும் ஒரு டெலிபோன் அளவு தூரமே இடைவெளி இருந்தது என்பதுதான்!

ஆனால் இன்றோ, தேவனுடைய ஜனங்கள் எண்ணற்ற துன்பங்களில் துவண்டு, ஏராளமான தோல்விகளில் உழன்று, மனச்சோர்வின் சேற்றில் சிக்கி, ஒன்றன்பின் ஒன்றாய் வந்த பிரச்சனைகளை முதுகு வளைய சுமந்து... தவிக்கிறார்களே ஏன்? 

 ஏன்? தேவனோடு தொடர்பு கொண்டு அவரிடம் இவையனைத்தையும் தெரியப்படுத்தி சமாதானம் பெற்றிருக்கலாமே? சமாதானம் பெறும் வார்த்தை, இவர்கள் உதட்டிற்கும் இவர்கள் இருதயத்திற்கும் உள்ள இடைவெளி தூரமே உள்ளது என்பதை இவர்கள் அறியாது இருந்த மடமையே அதற்கு காரணமாகும்! இருதயத்தில் உள்ள தொடர்பு வயர் சரியாக இருக்கும் பட்சத்தில், தேவனுடைய செவிகள் இவர்களின் “ஜெப வார்த்தைகளை” கேட்பதற்கு மிகுந்த ஆர்வமும் ஆயத்தமும் உள்ளதாகவே இருக்கிறது.

 ஒரே ஒரு நிபந்தனை! வானத்தையும் பூமியையும் இணைப்பதுபோல், உங்கள் உதட்டையும், தேவன் தங்கியிருக்கும் உங்கள் இருதயத்தையும் இணைப்பதற்கு தேவையான, சுமார் ஒரு அடி மாத்திரமே தூரம் உள்ள அந்த தொலைபேசி வயர் என்ன தெரியுமா? “உங்கள் விசுவாசமே” அந்த தொடர்பு வயர்! கர்த்தரையே சார்ந்து கொள்ளும் விசுவாசமே, உங்களையும் இரட்சித்து, உங்கள் தேவைகளையும் நிறைவாய் பூர்த்தி செய்திடும்!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!