கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
கர்த்தர் என்னைச் சந்தித்து இந்து மார்க்கத்திலிருந்து தம்முடைய சொந்தப் பிள்ளையாக என்னை மாற்றினார். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் ஆலயம் சென்று ஆண்டவரை நான் தொழுது கொள்ளப் பெருந்தடைகளை என் பெற்றோர் எனக்குக் கொடுப்பதில்லை. அதின் காரணம் என்னவெனில், சினிமாவுக்குச் சென்று கெட்டழியாமல் ஒரு நல்ல இடத்திற்குத்தானே மகன் செல்லுகின்றான் என்ற எண்ணத்தில் என்னை சபைக்குச் செல்ல அனுமதித்தார்கள்.
இப்பொழுதோ, எனக்கு ஒரு பெரிய கண்ணீரின் சோதனை! எங்கள் பூர்வீக குல தேவதைக்கு தலைச்சவரம் செய்ய பெற்றோரும், என் அண்ணன்மார்களும் கடுமையாக நிர்ப்பந்தித்தார்கள். நான் அதனைச் செய்ய முடியாது என்று கண்டிப்பாக மறுத்து நின்றேன். ஆனால் அவர்களோ, அப்படியானால் “உன்னை வீட்டை விட்டுத் துரத்திவிடுவோம்” என்றார்கள். நானோ 12-ம் வகுப்பு படித்து வந்தேன். என்னைத் தெரிந்து கொண்ட என் ஆண்டவருக்கு விசுவாச துரோகம் நடந்துவிடக் கூடாதே என மனம் அங்கலாய்த்தேன்.
எவ்வளவோ முயன்றும் என் பெற்றோரின் செயலிலிருந்து நழுவிச்செல்ல இயலவே இல்லை. கடைசியாக, என்னை குலதெய்வ கோயிலில் வற்புறுத்தி என்னை நிறுத்தி விட்டார்கள்!
நாவிதன் என் தலைமுடியைச் சிரைத்துத் தரையில் போடப் போட கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! என்று நல்ல சத்தமாகவே சொன்னேன்.
அதோடு சரி, “கிறிஸ்தவ விசுவாசம் இவன் இரத்தத்தில் கலந்துவிட்டது” என என்னை விட்டுவிட்டார்கள். இப்போது என் ஆண்டவரை மனதார அன்புகூர்ந்து பூஜிக்கிறேன்.
அவ்வப்போது என் வீட்டில் தடைகளும், பிரச்சனைகளும் ஏற்பட்டாலும், நானோ மிகுந்த தைரியத்தோடு ‘என் சிலுவை சுமந்து’ என் குருவை கெம்பீரமாய் பின்பற்றித் தொடருகிறேன்! அல்லேலூயா.