பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
05.07.2021

“கற்பு ஒழுக்கமே” தேவன் அதிகமாய் விரும்பும் பரிசுத்தம்!

நமது வஸ்திரத்தில் ஒரு ‘மை கறை’ பட்டுவிடுமானால், அதை நாம் தண்ணீரில் நனையவைத்து சோப்பை போட்டு இலகுவாக எடுத்துவிடலாம். அதில் ஒரு ‘கரிய தார் கறை’ படும்பட்சத்தில், அதை நாம் மண்ணெண்ணையை பயன்படுத்தி அப்புறப்படுத்திவிடலாம். ஆனால், அதில் ஒரு ‘வாழைக்குலையின் பால்’ பட்டுவிடுமானால் அதை, எதை வைத்தும் எடுக்க இயலாது. நமது சட்டையில் அந்த வாழை மரத்தின் கறை தனித்து இருந்து கொண்டே இருக்கும். நமது வஸ்திரம் நாள்பட்டு பழமையாகிப்போனாலும் அந்த வாழைக்கறை சற்றும் மாற்றம் பெறாமல் அங்கேதான் இருக்கும். அதை போக்கடிக்கவே முடியாது. அதின் காரணமாகத் தான் வாழைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள், அதற்கென்றே தனி வஸ்திரம் வைத்திருப்பார்கள்.

அதைப்போலவேதான் விபச்சார வேசித்தன பாவங்களும் ஆகும்! இந்த கொடிய வேசித்தனத்தால் தன்னை கறைப்படுத்திக்கொண்ட மனிதனுடைய பாவக்கறை, தனித்து நின்று கொண்டிருக்கும்! தாவீது ராஜாவுக்கு அது எப்பொழுதும் அவர் முகத்துக்கு முன்பாக நிழலாடிக் கொண்டிருந்ததாக வேதாகமத்தில் நாம் பார்க்கின்றோம் (சங்.51:3).

வேசித்தன பாவம் பரிசுத்த கர்த்தருக்கு கொஞ்சம்கூட பிடிக்காத காரியமாகும். “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக” என்ற கற்பனையை கர்த்தருடைய விரலே கற்பலகையில் எழுதினது மாத்திரம் அல்ல (உபா.9:10) தாம் எழுதியதை அக்கினியிலும், மேகத்திலும், காரிருளிலும் இருந்து இஸ்ரவேலருக்கு மகா சத்தத்துடன் அவர் சொன்னதாக தேவனுடைய வார்த்தை கூறுகின்றது (உபா.5:22). இதிலிருந்து, அது தேவனுக்கு எத்தனை கொடிய அருவருப்பான பாவம் என்பதை நாம் நன்கு நிதானித்துக் கொள்ளலாம்.

ஓ வாலிபனே! தினமும் தேவனோடு சில மணி நேரங்கள் ஜெபத்தில் செலவிட்டு, ஒழுங்காக உபவாசித்து, ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கும் தேவ மக்களை மாம்ச சிற்றின்ப ‘ஆசை இச்சைகள்’ எதுவுமே செய்ய இயலாது! அந்தப் பாவங்களை சாத்தான் அவர்களுக்கு விரோதமாக ஏவிவிட்டாலும் அந்தப் பாவங்களின் கவர்ச்சி அந்த மக்களைக் கண்டதும் “தொட்டால் சிணுங்கி” செடியைப் போல தங்களது தலைகளைத் தாழ்த்திவிடும்! அவைகள் அவர்களை ஒருக்காலும் மேற்கொள்ள இயலாது!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!