பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

15.11.2025

எந்த மனுஷனுமல்ல, எல்லா உதவிக்கும் கர்த்தரையே நோக்குங்கள்!

 யார் யார் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமாகப் பாதுகாத்துக்கொள்வார்களோ, யார் யார் தங்களை முற்றுமாக கர்த்தருக்கு ஒப்புவித்து அவரை மாத்திரம் உலகோர்க்கு உயர்த்தி காண்பிக்க வைராக்கியம் கொள்வார்களோ, யார் யார் பண ஆசை இல்லாதவர்களாகவும், மக்களுடைய புகழ் ஆரவாரம் ஆர்ப்பரிப்புகளை சற்றும் கண்டு கொள்ளாமலும், தங்களைக் கர்த்தருக்குள் மறைத்து தேவ மைந்தனின் சிலுவையை மட்டும் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்திக் காண்பிக்கிறார்களோ, அந்த மக்களை அவர் இன்றும் தமது கரத்தின் கருவியாக எடுத்து ஆச்சரியவிதமாக பயன்படுத்த வல்ல தேவனாக இருக்கின்றார்! தெய்வம் ‘ஒருவனை நம்பி’ அவனைத் தன் பணியில் வைத்திருப்பது, சொல்லி முடியா பாக்கியம்!

 இவ்வாறு, கர்த்தரையே நம்பி வாழ்ந்த ஜியார்ஜ் முல்லர் என்ற தேவ ஊழியன் தனது ஊழியத்தின் தேவைகளை நாசியில் சுவாசமுள்ள எந்த ஒரு மனுஷனுக்கும் மறைமுகமாகவோ, அல்லது நேரிடையாகவோ கூறி, அறிவித்து, தனது தேவைகளைப் பூர்த்தி செய்கிறவராக இராமல், கர்த்தர் ஒருவருக்கே மட்டும் தனது தேவைகளைக் கூறி, வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடமிருந்து அற்புதமாக ஒத்தாசையைப் பெற்றுக்கொண்டார்! 

 கர்த்தர் அவரை நம்பி ஒப்புவித்த ‘அனாதை இல்லத்தை’ சிறு குறையும் ஏற்படாமல் நடத்தியதெல்லாம் “கர்த்தாவின் ஒத்தாசை” மாத்திரமேயாகும்! அதற்காக அவர் செய்ய வேண்டியதா யிருந்ததெல்லாம், தன் ஆண்டவருடைய பாதங்களில் எப்பொழுதும் ஜெபத்தில் தரித்திருந்து ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கிக் கொண்டிருப்பதுதான். ஆம் “அவன் தன்னை உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக் கொண்டிருக்கும்” (ஏசாயா 17:8) என்ற வேதவாக்கியம் நிறைவேறிட, ஓ வாலிபனே இந்த நல்ல காலத்தில், உன் இளமையை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவரையே நம்பி வாழ்ந்து சுகித்திருப்பாயாக!

 - வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!