கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
கைவிடப்பட்ட ஒரு கூட்ட மக்கள்தான் மோரேவிய தீவினர். மலேரியா தொடங்கி தொழுநோய் வரை அங்கு வியாதிகள் மலிந்து கிடக்கும் சுகாதாரமற்ற ஓர் தீவு!
அனைவராலும் வைவிடப்பட்ட மோரேவிய தீவின்மீது பாரம் கொண்டு, தெய்வ அன்பினால் உந்தப்பட்டு, தியாக ஊழியம் செய்திடவே தேவபக்தன் “கவுண்ட் நிக்கோலஸ் ஸின்ஸெண்டார்ஃப்” என்ற வாலிப இளைஞனை தேவன் அழைத்து தெரிந்து கொண்டார்.
அன்று முதல் இன்று வரை, அனேகர் ஊழியம் செய்து, அங்குள்ள அநேகரை கிறிஸ்துவின் அடியார்களாக மாற்றினர்!
மாபெரும் மோரேவிய ஊழியத்திற்கு அடிகோலியான இந்த உத்தம தாசனின் இருதய மொழிகளைக் கேளுங்கள்! மோரேவிய மிஷனைத் தோற்றுவித்த மாபெரும் தேவபக்தனான கவுண்ட் நிக்கோலஸ் ஸின்ஸெண்டார்ஃப் தன் 4-வயது பாலகனாக இருக்கும்போதே மனந்திரும்பினார். அந்த பாலிய வயதினிலேயே.....
“அன்பான இரட்சகரே, நீர் என்னுடையவராகவும், நான் உம்முடைய வனாகவும் எந்நாளும் இருக்கத் தயைபுரியும்” என்றே எழுதிவைத்தார்!
மேலும், அவரின் வாழ்வில் கூறிய பொன்மொழி வாசகம்:
“எனக்கு ஒரே ஒரு வாஞ்சையுண்டு. அது இயேசு ஒருவரே, ஆம் இயேசு ஒருவர் மாத்திரமே!” என்பதாயிருந்தது.
அவர் ஒரு சமயம் இவ்வாறு கூறினார்:
“நான் ஒரு ஏழைப்பாவி. தேவனின் ஜெயகெம்பீர வண்டியின் பக்க வாட்டிலேயே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும், அவருடைய நித்திய அன்பின் அடிமை! நான் இவ்வுலகில் ஜீவிக்கும் காலபரியந்தம் இவ்விதமாய் இருந்துவிடவே நான் வாஞ்சிக்கிறேன்” என்று கூறினார்.
இதுவே அன்றி, வேறு யாதொரு நோக்கத்தோடு நான் ஊழியம் செய்தால், அது, லாபகர வியாபாரமேயாகும்! வாலிபனே, நீயும் இந்த உத்தம தாசனின் வாஞ்சையையே பெற்றிருப்பாயாக..... வஞ்சனைக்கு விலகி, உத்தம தேவ பணி செய்திட முன்வருவாயாக!