கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்களைப் பார்த்த அனைவரும், அவருடைய பரிசுத்த முகம் பிரகாசிப்பதைக் கண்டனர். அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு ஆண்டவரண்டை வந்தவர்களைவிட அவரது பரிசுத்த முகச் சாயலைப் பார்த்து கர்த்தரிடம் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அவருடைய ஒளி நிறைந்த முகத்தைப் பார்த்த வாலிபர், வயோதிபர்கள் மட்டுமின்றி சின்னஞ்சிறார்கள் கூட, ஆண்டவர் இயேசுவை சுலபமாகக் காண முடிந்தது. ஒரு தடவை இங்கிலாந்து தேசத்தில் சுந்தர் சிங் ஒரு கிறிஸ்தவ வீட்டின் கதவைத் தட்டி நின்றபோது, ஒரு சிறுமி வீட்டின் உள்ளிருந்து ஓடி வந்து சுந்தருடைய ஒளி நிறைந்த முகத்தை கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்து விட்டு வீட்டிற்குள்ளிருந்த தனது தாயிடம் ஓடிச்சென்று “அம்மா, இயேசு நமது வீட்டின் கதவைத் தட்டிக் கொண்டு நிற்கின்றார்” (ஆரஅஅல, துநளரள ளை முnடிஉமiபே யவ வாந னடிடிச) என்றாளாம்!
தேவனை அறியாத ஒரு கடையாந்திர தீவிற்கு தன்னை ஒரு மிஷனெரியாக அனுப்பும்படியாக ஒரு பரிசுத்த சகோதரி தனது கிறிஸ்தவ மிஷன் ஸ்தாபனத்திடம் கேட்டுக்கொண்டார்கள்! ஒரு ஆண்டு காலத்திற்குள்ளாக தேவ பெலத்தால் முழுத் தீவையும் கர்த்தருடைய ஒளிக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்ற உறுதியை கர்த்தர் எனக்குத் தந்துள்ளார்! அதற்காக எந்த ஒரு பிரசங்கமும், போதனையும் நான் அந்த மக்களிடம் செய்யாமல், கர்த்தர் தந்த ஒளி சிந்தும் பரிசுத்த வாழக்கையின் மூலமாக மாத்திரமே அந்த காரியத்தை செய்யப் போவதாகச் கூறிச்சென்ற அவர்கள், அப்படியே தனது பிரகாசமான கிறிஸ்தவ வாழ்வின் மூலமாக முழு தீவையும் ஆண்டவரண்டை கொண்டு வந்தார்கள். தனது இரட்சகரைப் பற்றி அந்த அம்மையாரின் உதடுகள் அல்ல, அவர்களது பரிசுத்தமான வாழ்க்கையே சாட்சி பகர்ந்தது.
ஓ, வாலிபனே “கிறிஸ்துவின் ஜீவியம்” ஒளி பிரகாசிக்கும் ஜீவியம்! உன் இருளான வாழ்வைப் பார்! அதைவிட்டு நீ வெளியே வந்துவிடு! அப்போது இரட்சகர், உன்னையும் பிரகாசிக்கச் செய்திடுவார்!